Load Image
Advertisement

டவுட் தனபாலு

தி.மு.க.,வைச் சேர்ந்த சென்னை மாநகராட்சி மேயர் பிரியா: சென்னையில், 'குப்பைஇல்லா பகுதிகள்' என்ற திட்டத்தின் கீழ் முதல்கட்டமாக, 18 சாலைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அங்கு மாநகராட்சி சார்பில் குறிப்பிட்ட இடைவெளியில், சிறிய வகை குப்பை தொட்டிகள்அமைக்கப்படும். சாலைகளில் குப்பை கொட்டுவோர் மீது அபராதம் விதிக்கப்படும்.

டவுட் தனபாலு: சென்னையில், 35 ஆயிரம் சாலைகள் இருக்கு... நீங்க இதுல வெறும், 18ஐ மட்டும் குப்பையில்லா பகுதின்னு தேர்வு செஞ்சு வேலை பார்த்தா, முதல்வர்ஸ்டாலின் ஆசைப்படுற மாதிரி,சென்னை என்னைக்குமே சிங்கப்பூரா மாறாது என்பதில் 'டவுட்'டே இல்லை!



தமிழக காங்., தலைவர் அழகிரி: உலக நாடுகளில் ஏற்படும் குழப்பத்தை விட, அ.தி.மு.க.,வில் அதிக குழப்பம் நிலவுகிறது. இதற்கு காரணம் பா.ஜ., தான். அவர்களின் சித்தாந்தம், அருகில் இருப்பவர்களின் செயல்பாடுகளை முடக்குவது. மஹாராஷ்டிரா, கோவா மாநிலங்களில் ஆட்சியை கவிழ்த்து, எம்.எல்.ஏ.,க்களை விலைக்கு வாங்கி வீழ்த்தியதைபோல, தமிழகத்திலும் அ.தி.மு.க.,வை வீழ்த்தி விடுவர்.

டவுட் தனபாலு: அடுத்த கட்சிவிவகாரத்துல நக்கல், நையாண்டி பண்றது இருக்கட்டும்... தமிழகத்துல அசைக்க முடியாத சக்தியாக இருந்த காங்கிரசை வீழ்த்தி, ஆட்சிக்கு வந்த தி.மு.க.,வுக்கு, இப்பவும்சாமரம் வீசிட்டு இருக்கிற நீங்க, இனி கனவுல கூட தமிழகத்துல காமராஜர் ஆட்சியை அமைக்க மாட்டீங்க என்பதில் 'டவுட்'டே இல்லை!



பிரதமர் மோடி: விளையாட்டுதுறையை தங்கள் வாழ்க்கையாக தேர்ந்தெடுக்க, இளைய தலைமுறையினரை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது. 2014க்கு முன், முந்தைய அரசு விளையாட்டு துறைக்கு, 800 - 850 கோடி ரூபாய் நிதி ஒதுக்கிய நிலையில், இந்த பட்ஜெட்டில், 2,500 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது; இது மூன்று மடங்கு அதிகம்.

டவுட் தனபாலு: ஒரு காலத்துலகாமன்வெல்த், ஒலிம்பிக் போன்ற சர்வதேச போட்டிகளில், பதக்க பட்டியலில் நமக்கு இடம் கிடைக்குமான்னு ஏங்கிட்டு இருந்தோம்... இப்ப நம்ம வீரர்கள் நாட்டிற்காக பதக்கங்களை குவித்து வருவதில் இருந்தே, உங்க அரசு விளையாட்டு துறைக்கு அளிக்கும் முக்கியத்துவம், 'டவுட்'டே இல்லாம தெரியுது!



வாசகர் கருத்து (5)

  • Anantharaman Srinivasan - chennai,இந்தியா

    சென்னை மேயரின் கவனத்துக்கு.... தேனாம்பேட்டை, அண்ணா ரோடு எல்டாம்ஸ் ரோடு Junction is one of the important place and heart of city. அங்கு மாலை நேரங்களில் அறிவிப்பு இன்றி (கையில் கர்சீப் இன்றிவரவும்) திடீரென்று வந்து பார்க்கவும்.குப்பை நாற்றம் குடலை பிடுங்கும்.

  • g.s,rajan - chennai ,இந்தியா

    இதே மாதிரி சென்னையில் பல வருடங்களாக குண்டும் குழியுமா இருக்கும் சாலைகளுக்கும் விமோசனம் கிடைக்குமா.... ???

  • RAMAKRISHNAN NATESAN - TEXAS ,DALLAS ,யூ.எஸ்.ஏ

    மேயர் சிகப்பா இருக்கார் .... அதனால பொய் சொல்ல மாட்டார் ....

  • J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்

    உங்கள் பதில் அருமை, அண்ணா

  • kumar - Erode,இந்தியா

    மேயர் அவர்கள் ராஜா அண்ணாமலை புரத்தில் இருக்கும் திருவீதி அம்மன் கோவில் தெருவுக்கு வந்து பார்க்காட்டும் . மாடு எருமை ஆடு கோழி என்று ஒரு பட்டாளமே இந்த தெருவில் அவிழ்த்து விடப்பட்டு மேய்ந்து கொண்டு இருக்கும் . இவற்றின் கழிவுகளால் இந்த பகுதி மக்களின் சுகாதாரம் ஒரு கேள்விக்குறியாக உள்ளது . கழிவுகள் மற்றும் அவற்றின் துர்நாற்றம் , இந்த கால்நடைகளால் தெரு பாதிக்கு மேல் அடைபட்டு கிடப்பது எல்லாம் பொதுமக்களுக்கு தொந்தரவு . ஆனால் இந்த கால்நடைகளின் சொந்தக்காரர் கரை வேட்டிக்காரர் என்பதால் அவரை ஒன்றும் செய்ய முடியாது . அவரை கட்டுப்படுத்தி , தெருவை சுத்தம் செய்ய முடியுமா மேயர் அவர்களால்?

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
+2 மாணவர்களே!
என்ன படித்தால் சிறந்த எதிர்காலம்?
தினமலர் வழிகாட்டி 2023 அனுமதி இலவசம்

Send Hi to 91505 74441

திருப்போரூர் திருவிழா - இது சொந்தவீடு வாங்கும் பெருவிழா!

Advertisement
Advertisement