Load Image
Advertisement

'பந்தா இல்லாத அமைச்சரா இருக்கிறாரே!'

கோவை, 'கொடிசியா' வளாகத்தில், திறன் மேம்பாட்டு திட்டம் குறித்து, தொழில் அமைப்பினருடன், மத்திய, தகவல் தொழில்நுட்பம் மற்றும் திறன் மேம்பாட்டு துறை இணை அமைச்சர் ராஜிவ் சந்திரசேகர், சமீபத்தில் ஆலோசனை நடத்தினார்.

கூட்டம் துவங்குவதாக அறிவிக்கப்பட்ட நேரத்திற்கு முன், அங்கு வந்த அமைச்சர், தொழில் துறையினரிடம், மத்திய பட்ஜெட் குறித்து கருத்து கேட்டு, குறிப்பெடுத்துக் கொண்டார்.

எந்த, 'பந்தா'வும் இல்லாமல், சாதாரணமாக எல்லாரிடமும் பேசினார். மேடையில் அரசின் சாதனைகளை தெளிவாக எடுத்துச் சொன்னதுடன், தொழில் துறையினரின் கேள்விகளுக்கு உடனே பதில் அளித்தார். தொடர்ந்து, தொழில் துறையினருடன் ஒன்றாக அமர்ந்து உணவருந்தினார்.

பார்வையாளர் ஒருவர், 'பந்தா இல்லாத வித்தியாசமான அமைச்சரா இருக்காரே...' என, புகழ, மற்றொருவர், 'அலப்பறைக்கு பஞ்சமில்லாத நம் தமிழக அமைச்சர்களையே பார்த்து பழகிட்டதால, இவரை போன்றவரை பார்த்தா நமக்கு வித்தியாசமா தான் தெரியுது...' என, 'கமென்ட்' அடித்து சிரித்தார்.



வாசகர் கருத்து (4)

  • ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா

    அண்ணாமலேக்கு இது தெரியுமா?

    • கல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா

      அண்ணாமலைக்கு இது தெரியும் .... ஆனா திருடர்கள் முன்னேற்ற கட்சியின் அறிவிலித்தலைவர்களுக்கும், அதுங்களுக்கு முட்டுக்கொடுக்கும் உபிகளுக்கும் (இங்கே கூட மேல ஒருத்தர் இருக்காரு) தெரியுமா என்பது ஒரு பெரிய சந்தேகம்தான் ..

  • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

    குறித்த நேரத்துக்கு முன் வருகை, குறிப்புகள், விவரங்களுடன் பேச்சு, உறுப்பினர்களுடன் உணவருந்தல், இதென்ன புதுப் பழக்கம்? நம் அமைச்சர்கள், வெறும் கவுன்சிலர்களிடம் இதை மக்கள் எதிர்பார்க்க ஆரம்பித்துவிட்டால் அவர்கள் பந்தர் கெத்து என்ன கதிக்காகும்?

    • கல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா

      மக்கள் எதிர்பார்த்தாக்க அவங்களுக்கு கிடைக்கறது அமைச்சர்கள் கையாலே கல்லடி, மனுவை வெச்சே மண்டையில அடி, "ஓசி"ன்னு திட்டு, சாதா திட்டு, மசாலா (கெட்ட வார்த்தை) சேர்த்த திட்டு போன்றவைதான் ..... வேற ஒண்ணும் இருக்காது .....

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
+2 மாணவர்களே!
என்ன படித்தால் சிறந்த எதிர்காலம்?
தினமலர் வழிகாட்டி 2023 அனுமதி இலவசம்

Send Hi to 91505 74441

திருப்போரூர் திருவிழா - இது சொந்தவீடு வாங்கும் பெருவிழா!

Advertisement
Advertisement