'எல்லாருக்கும் புரிஞ்சா சரி!'
கோவை சிங்காநல்லுார் குளக்கரையில் கொண்டாடப்பட்ட, 'உலக ஈர நிலங்கள் தினம்' நிகழ்ச்சியில், மாநகரபோலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் பங்கேற்று, குளக்கரையில் பனை மரக்கன்றுகளை நட்டார்.தொடர்ந்து, கோவை மண்டல கூடுதல் தலைமை வனப்பாதுகாவலர் ராமசுப்ரமணியன், வன மரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவன இயக்குனர் குன்னிகண்ணன் ஆகியோரும், பனை மரக்கன்றுகளை நட்டனர்.
கோவை மாநகராட்சி கமிஷனர் பிரதாப், அங்கிருந்த பள்ளி மாணவனை அழைத்து மரக்கன்றுகள் நட வைத்தார். இதைப்பார்த்த அதிகாரிகள், 'நீங்களும் ஒரு மரக்கன்று நடுங்கள்' என்று, அவரிடம் கூறினர். கமிஷனரோ, 'நான் இதுவரை நட்ட மரக்கன்றுகள் வளர்ந்திருந்தாலே, இந்நேரம் கோவை பசுமைக் காடாக மாறி இருக்கும்...' என கிண்டலடிக்க, அனைவரும் சிரித்தனர்.
முதியவர் ஒருவர், 'மரக்கன்றுகள் நட்டால் மட்டும் போதாது; தண்ணீர் ஊற்றி பராமரிக்கணும் என்பதை, கமிஷனர், 'காமெடி'யா சொல்றாரு... எல்லாருக்கும் அது புரிஞ்சா சரி...' என, முணுமுணுத்தவாறு நடந்தார்.
'அதெல்லாம் ஒண்ணும் நடக்காது!'
தஞ்சாவூரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற, தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மகேஷ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், 'மாணவர்கள் படிக்க வரும் இடம் பள்ளிக்கூடம். மாணவர்களை படிப்பு சார்ந்த விஷயத்திற்கு மட்டுமே பயன்
படுத்த வேண்டும். அதை விடுத்து, அவர்களை வேறு பணிகளுக்கு பயன்படுத்தினால், யாராக இருந்தாலும் துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.
மூத்த நிருபர் ஒருவர், 'இவரு எச்சரிக்கைக்கு பயந்து, ஆசிரியர்களும், தலைமை ஆசிரியருமா இனி துடைப்பத்தை எடுத்துக்கிட்டு வகுப்பறைகளை
கூட்டவும், கழிப்பறைகளை கழுவவும் போவாங்க...' என, 'கமென்ட்' அடிக்க, மற்றொரு நிருபர், 'அதெல்லாம் ஒண்ணும் நடக்காது... எல்லா பள்ளிகளிலும், துப்புரவு ஊழியர்களை அரசு நியமிக்கற வரைக்கும், மாணவர்களை தான் வேலை வாங்குவாங்க...' என, முணுமுணுத்தவாறு நடையை கட்டினார்.
'தோழர்கள் சாயம் வெளுத்து போச்சு!'
திருப்பூரில் நடைபெற்ற, ஹிந்து ஆட்டோ தொழிலாளர்கள் முன்னணியின் மாநில பொதுக்குழுவை, ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் துவக்கி வைத்தார்.அவர் பேசுகையில், 'ஆட்டோ டிரைவர்கள், சமுதாயத்தில் நடக்கும் அனைத்து நிகழ்வுகளையும், ஒற்றர்களை போல கண்காணிக்கும் திறமை
பெற்றவர்கள். பெண்கள் தனியாக ஆட்டோவில்சென்று வரலாம் என்ற அளவுக்கு, ஹிந்து முன்னணி சங்க ஆட்டோக்கள் மீது நம்பிக்கை ஏற்பட வேண்டும். 'திருப்பூரில் ஆட்டோ சங்கம்என்றாலே, கம்யூனிஸ்டுகள் தான் என்ற மாயை மறைந்து
விட்டது. 'அவர்கள், மாதச்சந்தா வசூல் செய்து, அரசியல் கட்சிக்காக வேலை செய்வர். நீங்கள், ஆட்டோ தொழிலாளர்கள் வாழ்வாதார மேம்பாட்டிற்காக செயல்பட
வேண்டும்' என்றார்.ஆட்டோ டிரைவர் ஒருவர், 'தோழர்கள் சாயம் வெளுத்து ரொம்ப நாளாச்சு ஜி... இனி, எல்லா ஆட்டோ டிரைவர்களையும், நம்ம பக்கம்
இழுத்துடலாம்...' என, 'கமென்ட்' அடிக்க, அனைவரும் கமுக்கமாக சிரித்தனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!