தர்மபுரி மாவட்டம், மணியம்பாடியில், பா.ம.க., நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில், அக்கட்சியின் தலைவர் அன்புமணி பங்கேற்றார்.
அவர் பேசுகையில், 'தி.மு.க., ஒரு முறை ஆட்சிக்கு வந்தால், அடுத்த முறை வராது. அடுத்த சட்டசபை தேர்தலில், மக்கள் தி.மு.க.,வை தேர்வு செய்ய வாய்ப்பில்லை. அதேபோல, அ.தி.மு.க., இன்றைக்கு நான்காக பிரிந்து கிடக்கிறது; அவர்கள் குழப்பத்தில் இருக்கின்றனர். இதனால், அடுத்த தேர்தலில், பா.ம.க., ஆட்சி அமைக்க பிரகாசமான வாய்ப்பு உள்ளது' என்றார்.
மூத்த நிருபர் ஒருவர், 'இவர் ஏன் இப்படி ஆயிட்டாரு... 'கட்சியை பலப்படுத்தி ஆட்சியை பிடிப்போம்'னு சொல்லாம, 'சென்டிமென்ட்டா தொடர்ந்து ரெண்டாவது முறை தி.மு.க., ஆட்சிக்கு வராது... அ.தி.மு.க., உடைஞ்சி கிடக்கு... அதனால நமக்கு வாய்ப்பு கிடைக்கும்'னு அடுத்தவர் பலவீனத்தை நம்புறாரே...' என, முணுமுணுத்தவாறு நடையை கட்டினார்.
தங்கள் திறமை, கொள்கைப்பிடிப்பு எதுவும் சொல்லும்படி இல்லை அவர் வந்துவிடக்கூடாது, இவர் கட்சி உடைந்து காணாமல் போக வேண்டும்' நான் ஆட்சிக்கு வர வேண்டும் என்ன ஒரு சாடிஸ்ட் மனோபாவம்