சிவகங்கையில் நடந்த புத்தக கண்காட்சியில், தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் பெரியகருப்பன்,சிவகங்கை தொகுதி காங்., - எம்.பி., கார்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கார்த்தி பேசுகையில், 'தற்போது யாருக்கும் புத்தகம் படிக்கும் பழக்கமே இல்லை. எந்த அரசியல் கட்சியாவது, தேர்தலின் போது, 'ஏதேனும் ஒரு புத்தகத்தை முழுமையாக படித்திருந்தால் தான் சீட்' என்று சொன்னால், ஒரு அரசியல்வாதி கூட தேர்தலில் நிற்க மாட்டார்' என்றார்.
இதன்பின் பேசிய அமைச்சர் பெரியகருப்பன், 'எம்.பி., சொன்னது போல இல்லை. ஒரு முறை புத்தகம்வாசிப்பவர்கள், தொடர்ந்து அதை நேசிக்கத்தான் செய்வர். கார்த்தி சொன்னது போல, யாருமே புத்தகம்படிப்பதே இல்லை என்று நானும் சொன்னால், எழுத்தாளர்கள், பதிப்பாளர்கள் தொழிலில் இருந்து வெளியேறி விடுவர்' என்றார்.
பார்வையாளர் ஒருவர், 'அரசியல்வாதிகள் குறித்த எம்.பி.,யின், 'கமென்ட்' அமைச்சரை ரொம்பவே பாதிச்சிடுச்சு போல...' என, முணுமுணுத்தவாறு நடையை கட்டினார்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!