'செங்கல்லை வச்சி சுத்துவாங்களே!'
பா.ஜ., மாநிலத் தலைவர் அண்ணாமலை, கட்சி பிரமுகர்கள் இல்ல விழாக்களில் பங்கேற்க, சமீபத்தில் திருநெல்வேலி வந்தார். மாநில துணைத் தலைவர் நயினார் நாகேந்திரன் வீட்டில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில், 'மதுரையில் 'எய்ம்ஸ்' மருத்துவமனை, 2026ல் செயல்படும் என, மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா லோக்சபாவில் தெரிவித்துள்ளார். பிரதமர் உத்தரவின்படி, முந்தைய திட்டத்தை விட கூடுதலாக, ஆடிட்டோரியம், 150 படுக்கைகள் இம்மருத்துவமனையில் அமைய உள்ளன. திட்டம், 1,900 கோடி ரூபாய் பட்ஜெட்டில் வர உள்ளது' என்றார்.
கட்சி நிர்வாகி ஒருவர், 'அப்ப, அடுத்த வருஷம் நடக்க உள்ள லோக்சபா தேர்தலிலும், தி.மு.க.,வினர், செங்கல்லை கையில வச்சிக்கிட்டு சுத்துவாங்களே... சீக்கிரம், எய்ம்ஸ் வேலையை ஆரம்பிச்சு, அவங்க வாயை அடைக்கணும் தலைவரே...' என ஆதங்கப்பட, அருகில் இருந்த தொண்டர்கள், ஆமோதித்து தலையாட்டினர்.
திமுகவின் 'செங்கல்வராயன் ' அடுத்த தேர்தலிலும் ' ஒற்றைச் செங்கல்லால் ஆட்சியை பிடித்தவர்' என்று பீற்றிக்கொள்ளுமுன் ஏதாவது செய்து மாணத்தைக் காப்பாற்றிக்கொள்ளுங்கள்