சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையில், அ.ம.மு.க., பொதுச் செயலர் தினகரன் பேட்டி கொடுத்தார்.
அப்போது அவர் கூறுகையில், '2021ல் நடந்த சட்டசபை தேர்தலில், தி.மு.க., கூட்டணிக்கு இருந்த ஆதரவு தற்போது இல்லை. தேர்தலில் வெற்றி பெற தொண்டர்கள் பலமும், மக்கள் நம்பிக்கையும் இருக்க வேண்டும்.
'தி.மு.க.,வை வீழ்த்த நான் ஒத்துழைப்பேன். தி.மு.க.,விற்கு எதிரானவர்கள் ஒன்று சேர்ந்தால் தான், அ.தி.மு.க., வெற்றி பெறும். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆளுமையில் இருந்த அ.தி.மு.க., தற்போது, 'லெட்டர் பேடு' கட்சிகளிடம் ஆதரவு கேட்கும் நிலைக்கு மாறி விட்டது' என்றார்.
மூத்த நிருபர் ஒருவர், 'இந்த நிலைமைக்கு இவரும்தானே காரணம்... ஜெயலலிதாவால் ஆளான இவரு தானே, முதலில், அ.தி.மு.க.,வை உடைச்சு, அ.ம.மு.க.,வை ஆரம்பிச்சார்... இவரு தென்மாவட்டங்கள்ல பிரிச்ச, அ.தி.மு.க., ஓட்டுகளால தானே, தி.மு.க.,வே ஆட்சிக்கு வந்தது...' என முணுமுணுக்க, மற்றவர்கள் அதை ஆமோதித்து தலையாட்டினர்.
இவர்தான் அதிமுகவை புனர்ஜன்மம் எடுக்க அவதாரம் செய்திருக்கிறார் இன்னும் இருக்கும் கொஞ்சநஞ்ச கட்சியையும் மூடி முடிவுக்கு கொண்டுவர இவர் நுழைந்தாலே போதும்