வெட்டுக்கிளி போன்ற பூச்சிகள் அடர்ந்த கூட்டமாகப் பறக்கும்போது, ஒன்றோடு ஒன்று மோதாமல் பறப்பது எப்படி? அதற்கென பூச்சிகளின் மூளையில் ஒரு நரம்பு அமைப்பை இயற்கை கொடுத்திருக்கிறது.
அமெரிக்காவிலுள்ள பென்சில்வேனியா மாநில பல்கலைக்கழக விஞ்ஞானிகள், பூச்சிகளின் இந்த நரம்பு அமைப்பின் உந்துதலில் ஒரு உணரியை உருவாக்கி உள்ளனர்.
இந்த சிறப்பு உணரி, தற்போது சாலைக்கு வந்திருக்கும் தானியங்கி வாகனங்கள், மற்ற வாகனங்களுடன் மோதாமல் தவிர்க்க உதவும். 'ஆப்டோ எலக்ட்ரானிக் சென்சார்' எனப்படும் இந்த ஒளிமின்னணு உணரியில் ஒளியை உணரக்கூடிய எட்டு 'மெம்டிரான்சிஸ்டர்'கள் உள்ளன. மாலிப்டினம் #'டைசல்பைடி'னால் ஆன இந்த உணரிகளின் மொத்த அளவே 40 சதுர 'மைக்ரோமீட்டர்'கள்தான்.
ஏற்கனவே உருவாக்கப்பட்டு உள்ள 'மோதல் தவிர்ப்பு' உணரிகளைவிட, அளவில் மிக நுண்ணியதாகவும், குறைந்த மின்சாரத்தை நுகர்கிறது இருக்கிறது இந்த உணரி. இரவில், தானோட்டி வாகனங்களுக்கு எதிரில் வரும் வாகனங்களின் விளக்கொளியின் பிரகாசத்தை வைத்து, இருவாகனங்களுக்கிடையேலான இடைவெளியை கணித்து, மோதலைத் தவிர்க்க இந்த உணரி உதவும்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!