Load Image
Advertisement

ரோமாபுரி கட்டடகலையின் ரகசியம்!

ஆயிரம் ஆண்டுகளைக் கடந்து நிற்கும் கட்டடங்களுக்கு, ரோம் நகரம் பிரபலமானது. அது எப்படி, ரோமபுரி கட்டடக் கலைஞர்களால், பூகம்பங்களையும் தாங்கி, காலம் கடந்து நிற்கும் உறுதியான கட்டடங்களைக் கட்ட முடிந்தது?

இந்தக் கேள்வியோடு, அமெரிக்காலுள்ள ஹார்வர்டு பல்கலைக்கழகம், மாசாசூசெட்ஸ் தொழில்நுட்ப நிலைய ஆகியவற்றின் விஞ்ஞானிகள் ஆராய்ந்தனர்.

இத்தாலி மற்றும் சுவிட்சர்லாந்திலுள்ள ஆய்வகங்களில் பல ரோமானிய கட்டடங்களிலிருந்து மாதிரிகளை கொடுத்து அவர்கள் ஆராய்ந்தனர்.

அந்த கட்டிடங்களின் உறுதிக்குக் காரணம், அந்தக்கால 'காங்கிரீட்'டான சுண்ணாம்பு மணல் ஜல்லி கலவையில்தான் ஒளிந்துஇருந்தது.

குறிப்பாக, இத்தாலிய சுண்ணாம்பில் இருந்த 'லைம் கிளாஸ்ட்ஸ்' என்ற தாது, இன்றும் உறுதியாக நிற்கும் பண்டைய ரோமாபுரி கட்டடங்கள் அனைத்திலுமே இருந்தது.

கட்டடத்தில் லேசாக விரிசல் ஏற்பட்டால், இந்தத் தாது ஈரப்பதத்துடன் வினைபுரிந்து, கால்சியம் செறிந்த திரவமாக மாறுகிறது.

பிறகு, அதுவே கால்சியம் கார்பனேட் படிகமாக மாறி, அந்த விரிசலை இட்டு நிரப்பிக்கொள்கிறது.

மேலும், சுண்ணாம்பை நீருடன் கலக்கும்போது சூடாக கொதிக்கும். அதே சூட்டுடன் மணல், ஜல்லி கலந்து கட்டடமாகக் கட்டுவதும் பழைய ரோமாபுரிக் கட்டடங்களின் உறுதிக்குக் காரணம் என விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். மீண்டும் சுண்ணாம்பு கான்கிரீட்டுக்கு மவுசு வருமா?



வாசகர் கருத்து (4)

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
வருங்காலத்தை
ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் எவை?
தினமலர் வழிகாட்டி 2023 - அனுமதி இலவசம்

Send Hi to 91505 74441

திருப்போரூர் திருவிழா - இது சொந்தவீடு வாங்கும் பெருவிழா!

Advertisement
Advertisement