திருப்பூரில் நடந்த, எம்.ஜி.ஆர்., பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில், அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., குணசேகரன் பங்கேற்றார்.
அவர் பேசுகையில், 'எம்.ஜி.ஆர்., காலத்தில், திருப்பூர் இரண்டாவது குடிநீர் திட்டமும், ஜெயலலிதா ஆட்சியில் மூன்றாவது குடிநீர் திட்டமும் வந்தது. முதல்வராக பழனிசாமி இருந்த போது, நான்காவது திட்டத்தை துவக்கினோம்.
'கொரோனா மட்டும் வராமல் இருந்திருந்தால், திருப்பூர் மக்கள் இந்நேரம் சுவையான மேட்டுப்பாளையம் குடிநீரை குடிச்சிட்டு இருந்திருக்கலாம்; மாறாக, 'சப்பை' தண்ணீரை குடிச்சிட்டு இருக்காங்க. இனி, நான்காவது திட்டத்தை செயல்படுத்தும் போது, தி.மு.க., திட்டத்தை கொண்டு வந்த மாதிரி பேசுவாங்க; நம்பிடாதீங்க...' என்றார்.
மூத்த நிருபர் ஒருவர், 'கொரோனா பலரது வாழ்வாதாரத்தையே அழிச்சிடுச்சி... அதைப் பற்றி வருத்தப்படாம, திட்டத்துக்கு பெயர் கிடைக்காம போயிடுமோன்னு கவலைப்படுறாரே...' என, முணுமுணுத்தபடி நடந்தார்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!