சென்னை திருவொற்றியூர், அ.தி.மு.க., சார்பில், எம்.ஜி.ஆர்., பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதற்காக, திருவொற்றியூர் முழுதும், அக்கட்சியினர், 'போஸ்டர்' ஒட்டி இருந்தனர்.
அதில், அ.தி.மு.க., திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலர் மூர்த்தி பெயருக்கு பின்னால், 'பி.ஏ., - எம்.எல்.ஏ.,' என, குறிப்பிடப்பட்டு இருந்தது. மூர்த்தி, தற்போது எம்.எல்.ஏ., கிடையாது; கடந்த தேர்தலில், மாதவரம் தொகுதியில் போட்டியிட்டு, 57 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில், தி.மு.க.,வின் சுதர்சனத்திடம் தோல்வியடைந்தார்.
இந்நிலையில், போஸ்டரில் மூர்த்தியை எம்.எல்.ஏ., என, குறிப்பிடப்பட்டிருந்ததை பார்த்த முதியவர் ஒருவர், 'இவங்க கட்சியில் நடக்கிற உட்கட்சி பூசலில், இவரெல்லாம் இனி இப்படி தான், எம்.எல்.ஏ., ஆகணும்... எலக் ஷன்ல நின்றெல்லாம் ஜெயிக்க முடியாது...' என நக்கலடிக்க, உடன் சென்ற சக முதியவர்கள், கமுக்கமாக சிரித்தனர்.
இன்னும் பழைய நினைப்பை விடாமல் தான் எம் எல் ஏ என்ற கெத்தைக் காட்டுகிறார் போல