Load Image
Advertisement

நான் அலெய்டா குவேரா பேசுகிறேன்.

உலகை அதிரச் செய்த வீரன் சே குவேரா
இனம் மொழி நாடு கடந்து இளைஞர்கள் பலர் இறுமாப்புடன் அவர் உருவம் பொறித்த டிசர்ட்டை அணிந்து வலம் வருவதை பலரும் பல இடங்களிலும் பார்த்து இருக்கலாம்

39 வயதில் எதிரிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட சே குவேரா வாழ்ந்த காலம் முழுவதும் அடக்குமுறைக்கு எதிராக குரல் கொடுத்தவர் ஒடுக்குமுறைக்கு எதிராக போர் தொடுத்தவர்
கியூபா இவரது தாய் நாடு அல்ல ஆனாலும் அந்நாட்டின் விடுதலைக்காக பிடல் காஸ்ட்ரோவுடன் சேர்ந்து போராட்டம் நடத்தினார்
இதன் காரணமாக கியூபா விடுதலை பெற்றதும் அந்த நாட்டின் உயர் பதவியில் அமரவைத்து அழகு பார்க்கப்பட்டார்
ஆனால் தனக்கு ஆட்சி அதிகாரம் இதெல்லாம் சரிப்பட்டு வராது என்று அனைத்தையும் துறந்துவிட்டு பொலிவியா நாட்டு பிரச்னைக்கு தீர்வு காண சென்றுவிட்டார்
திரும்பிவருவோம் என்று நினைத்துதான் சென்றார் ஆனால் திரும்ப வரவே முடியாத இடத்திற்கு சென்றுவிட்டார்
அவர் அப்படி பிரிந்து செல்லும் போது அவரது செல்ல மகள் அலெய்டாவிற்கு வயது நான்கு ,அந்த அலெய்டாவிற்கு இப்போது வயது 63தாயின் அரவனைப்பில் வளர்ந்து மருத்துவராகி இன்று அங்குள்ள மக்களுக்கு சேவை செய்து வரும் இவர் ஊனமுற்ற மற்றும் புலம் பெயர்ந்து வந்துள்ள குழந்தைகளுக்கான காப்பகம் நடத்திவருகிறார்.
அவர் இந்தியாவில் உள்ள தோழர்கள் அழைப்பின் பேரில் கோல்கட்டா,கேரளா,தமிழ்நாடு ஆகிய பகுதிகளுக்கு வந்திருந்தார்
சென்னை பாரிமுனை ராஜா முத்தையா மன்றத்தில் கடந்த 16 ந்தேதி அவருக்கு வழங்கப்பட்ட வரவேற்பு விழாவில் பங்கேற்று பேசினார்
எனது தந்தை மீது நீங்கள் கொண்டிருக்கும் அன்பிற்கு மிகவும் நன்றி ஆனால் அது எனக்கு அடையாளமே தவிர அங்கீகாரமில்லை நான் இந்த சமூகத்திற்கு எந்த அளவு பயன்பட்டுக் கொண்டிருக்கிறேன் என்பதுதான் என்னை எப்போதும் மக்களிடம் நிலை நிறுத்தும்
கல்விதான் விடுதலைக்கான முதல் ஆயுதம் என்பதை உணர்ந்து எனது தந்தை போட்ட விதை காரணமாக இன்றைக்கு கியூபாவில் மக்களுக்கு கல்வியும்,மருத்துவமும் முற்றிலும் இலவசமாகும்.எந்த நாட்டிலும் இல்லாத அளவிற்கு எங்கள் கியூபா நாட்டில்தான் மருத்துவர்களும் மருத்துவம் சார்ந்த விஞ்ஞானிகளும் அதிகம் .இந்த கொரோவிற்கு ஐந்துவிதமான தடுப்பு மருந்துகளை கண்டுபிடித்து வழங்கியவர்கள் கியூபா விஞ்ஞானிகளே.
பெண்களுக்கு நாங்கள் கொடுக்கும் அளவிற்கு முக்கியத்துவத்தை உலகில் எந்த நாட்டினரும் கொடுப்பது இல்லை என்பதை பெருமிதத்தோடு கூறிக்கொள்கிறோம்.அரசு ஊழியர்களில் 60 சதவீதம் பேர் பெண்களே.திருமணம் செய்யும் போது மணப்பெண்ணிற்கு அதாவது மணைவிக்கு உரிய பங்கு உரிமை என்ன என்பதை எழுதி கையெழுத்திட்டு தரவேண்டும்.
நான் கூட என் தந்தையின் அரவணைப்பில் வளரவில்லை தாய் மார்சால்தான் வளர்க்கப்பட்டேன் என்னை சமூக பொறுப்புள்ளவராக வளர்த்தவர் அவரே.
என் தந்தை மரணத்தை சாதாரணமாகவும் சவாலாகவும் எதிர்கொண்டவர் நான் இறந்தால் எனக்காக நீங்கள் அழாதீர்கள். அதற்கு பதில், நான் விட்டுச்செல்லும் பணிகளை தொடருங்கள் என்றுதான் கூறியிருந்தார் அதைத்தான் நான் தொடர்கிறேன் என்றார்.
-எல்.முருகராஜ்.வாசகர் கருத்து (7)

 • Lion Drsekar - Chennai ,இந்தியா

  கியோபா பெடரல் காஸ்ட்ரோ என்று முன்பெல்லாம் பேசப்பட்டு வந்த காலம் மட்டுமே அறிந்த எங்களுக்கு, திரைக்கு பின்னால் இவ்வளவு புதைந்துள்ள செய்தி திரு முருகராஜ் ஐயா அவர்களால் வெளிவந்தது மிக்க மகழ்ச்சி. குறிப்பாக இன்று அந்த நாட்டில் மருத்துவம் மற்றும் கல்வி முற்றிலும் இலவசம் என்பது பாராட்டப் படவேண்டிய ஒன்று, மக்களுக்கு நல்லது செய்பவர்களின் முடிவு இப்படி நடைபெறுவது இவ்வுலகின் சாபக்கேடு போலும், வந்தே மாதரம்

 • NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா

  உண்மையில் கியூபாவின் மருத்துவர் குழாம் பாராட்டப்படவேண்டியவர்கள்

 • Vijayanand G - ERODE,இந்தியா

  கியூபா விடம் இருந்து நிறைய கற்க வேண்டும்

 • கனோஜ் ஆங்ரே - மும்பை,இந்தியா

  சே குவேரா.. மகளின் இந்த உரைக்கு... படித்தவர்கள், பண்பாளர்கள், பண்பானவர்கள் நிறைந்த இந்த தினமலர் பதிவில் ஒருவர்கூட அவரை வாழ்த்தவும் இல்லை, வரவேற்கவும் இல்லை. என்ன செய்வது.. இங்கிருப்பவர்கள் அனைவருமே அதிமேதாவிகள்... அகிலஉலக அறிவாளிகள்... வேதவிற்பன்னர்கள், அறிவுலகமேதைகள். இந்த சேகுவேரா..வின் மகள் இந்து மதத்தை குறை சொல்லி இருந்தால்... ஓடோடி வந்திருப்பார்கள்... இல்லை, பிரதமரை வாழ்த்தி இருந்தால், ஓடி, ஓடி, ஓடோடி வந்து கும்மி அடித்திருப்பார்கள். இவர் “உலக புரட்சியாளன் சே குவேரா” வின் மகள் அல்லவா.. இவர்களுக்கு புடிக்காது என்பதில் வியப்பேதுமில்லையே....?

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement