தாவர இலைகளுக்கே உரிய ஒன்று ஒளிச் சேர்க்கை. சூரியனிலிருந்து கிடைக்கும் ஒளியை சேகரித்து, தாவரங்கள் தங்களுக்கு வேண்டிய பச்சையம் என்கிற உணவை தயாரிக்கின்றன. இதே வேலையை செயற்கையாக செய்ய பல விஞ்ஞானிகள் முயன்று வருகின்றனர். அதில் வெற்றி கண்டோரும் உண்டு.
அந்த வெற்றிகளில் ஒன்று தான் அமெரிக்காவிலுள்ள மிச்சிகன் பல்கலைக்கழக விஞ்ஞானிகளின் முயற்சி. இவர்கள் உருவாக்கியுள்ள செயற்கை ஒளிச்சேர்க்கை கருவி, சூரிய ஒளியிலிருந்து கிடைக்கும் ஆற்றல் மூலம் தண்ணீரை சிதைத்து, ஹைட்ரஜனை உருவாக்குகிறது.
இந்த செயற்கை ஒளிச்சேர்க்கை கருவி, இயற்கையினுடையதைவிட 10 மடங்கு கூடுதல் திறனுடன் வேலை செய்கிறது. இதுவரை உருவாக்கப்பட்ட பல செயற்கை ஒளிச்சேர்க்கை கருவிகள் அளவில் பெரியவையாக இருந்தன.
ஆனால் மிச்சிகன் விஞ்ஞானிகளின் படைப்பு, கைக்கு அடக்கமாக இருப்பது கூடுதல் சிறப்பு. பசுமை முறையில் தயாரிக்கப்படும் ஹைட்ரஜன் எரிபொருளை, நீங்கள் நாளை வீடுகளிலேயே தயாரித்துக்கொள்ள மிச்சிகன் ஒளிச்சேர்க்கை கருவி உதவும்.
இதனால் ஏற்படும் தீங்கினை யார் நமக்கு எடுத்துரைப்பார்கள்? பெட்ரோல் மற்றும் பிளாஸ்டிக் வந்த பொது கொண்டாடினோம் இன்று அதனை பூமியின் மாசு படுத்தும் ஒன்றாக எடுத்து காட்டுகிறோம் , இது போல இன்னமும் பல