சீனாவின் மாநில கப்பல் கழகம், காற்றாலை விஷயத்தில், பெரிதினும் பெரிது கேள் என்கிறது. அண்மையில் அக்கழகம் அறிவித்துள்ள திட்டத்தின்படி, உலகின் மிகப்பெரிய காற்றாலையை அது கட்டமைக்கப் போகிறது. உச்சக்கட்ட மின்சாரமாக 18 மெகா வாட்டை உற்பத்தி செய்யக்கூடிய அந்தக் காற்றாலை விசிறிகளின் நீளம் 260 மீட்டர்.
அதாவது ஒரு விசிறி, கால் கிலோ மீட்டருக்கு சற்று அதிகமாக நீள்கிறது. இதன் மூன்று விசிறிகளும் சுழலும்போது உருவாகும் வட்டப் பரப்பளவில், 10 கால்பந்து மைதானங்களை அடக்கிவிடலாம்.
காற்றாலைகள் அளவில் பெரிதாக இருந்தால், அவை உற்பத்தி செய்யும் மின்சாரமும் அதிகமாக இருக்கும். சீன கப்பல் கழக காற்றாலையால், ஒரு ஆண்டுக்கு 40 ஆயிரம் வீடுகளுக்கு வேண்டிய 74 மில்லியன் கிலோ வாட் மின்சாரத்தை தயாரிக்கும் ஆற்றல் பெற்றது. ஒரு பெரிய ஊருக்கு வேண்டிய மின்சாரத்தை தரும் திறன் படைத்தது தான், இந்த காற்றாலை.
செய்யுங்க செய்யுங்க