காதில் அணியும் ஒலிக்கருவியில் பல புதுமைகள் வந்தபடி இருக்கின்றன. அதில் இது வேற லெவல்.
'வைஸ்இயர்போன்' என்ற இந்தக் கருவி, உங்கள் முக அசைவுகளைப் பயன்படுத்தி, உங்கள் மொபைல் போனை இயக்க உதவுகிறது.
அது எப்படி? உங்கள் முகத் தசை அசைவுகள், கண் அசைவுகள் மற்றும் மூளை ஆகியவற்றிலிருந்து வெளிப்படும் உயிரிமின் சமிக்ஞைகளை பெரிதாக்கி தரும் அமைப்பு வைஸ்இயர்போனில் உள்ளது.
அப்படி பெரிதுபடுத்திய சமிக்ஞைகளை ஒரு மொபைல் செயலி அலசி, அவற்றை உத்தரவுகளாக மாற்றுகிறது. இதன் மூலம், மொபைலை இயக்க முடியும்.
கை வைக்காமலேயே, மொபைலில் அழைப்புகளை எடுக்கவும், ஒலியை கூட்டவும் முடியும்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!