சிப்பி, நத்தை போன்ற மென்மையான உயிரினங்களுக்கு, இயற்கை தந்த பாதுகாப்புதான் உடலை மறைக்கும் ஓடுகள்.
இதே ஓடுகளை மூலப்பொருட்களில் ஒன்றாக வைத்து, மனிதர்களின் மண்டையைக் காக்கும் தலைக் கவசத்தை செய்தால் என்ன? ஜப்பானைச் சேர்ந்த கோவ்ஷி கெமிக்கல் இன்டஸ்ட்ரியின் விஞ்ஞானிகள் அதைத் தான் செய்துள்ளனர்.
ஒரு ஜப்பானிய மீனவ கிராமத்தில் ஆண்டுதோறும் கிடைக்கும் 40,000 டன் சிப்பி ஓடுகளையும், வேறு சில மூலப்பொருட்களையும் வைத்து 'ஷெல்மெட்' என்ற சிப்பி வடிவிலேயே தலைக் கவசத்தை தயாரித்துஉள்ளனர்.
ஓசாகா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கொடுத்த தொழில்நுட்பப்படி உருவான ஷெல்மெட், பிற தலைக்கவசங்களைவிட 33 சதவீதம் உறுதியானது என்று சோதனைகளில் தெரியவந்து உள்ளது.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!