பூமிக்கடியில் கிலோமீட்டர் கணக்கில் நீளும் கைவிடப்பட்ட சுரங்கங்களின் கதி என்ன? அதோ கதி தான்.
அப்படி வீணாகக் கிடக்கும் சுரங்கங்களை, ஆற்றலை உற்பத்தி செய்து தரவும், சேமித்து வைக்கவும் உதவும் கிடங்கிகளாக மாற்ற முடியும் என ஆஸ்திரியாவிலுள்ள ஐ.ஐ.ஏ.எஸ்.ஏ., ஆராய்ச்சியாளர்கள் கணக்கிட்டுஉள்ளனர்.
அவர்கள் சுட்டிக்காட்டுவது, 'கிரேவிட்டி பேட்டரி' எனப்படும் புவியீர்ப்பாற்றல் மின்கலன் தொழில்நுட்பத்தைத்தான்.
தரை மேலே இருக்கும் சுரங்க நுழைவாயிலிலிருந்து, கீழே பல கி.மீ., நீளும் சுரங்கத்திற்குள் பல டன் எடையுள்ள பொருளை இறக்கிவிடவேண்டும். அதில் கட்டப்பட்டுள்ள வடம், மின் உற்பத்திக் கருவியை இயக்கும்.
இதிலிருந்து கிடைக்கும் மின்சாரத்தை, ஏற்கனவே சுரங்கத்துடன் இருக்கும் மின்வாரிய இணைப்பின் மூலம் வினியோகிக்க முடியும்.
உபரியாக இருக்கும் மின்னாற்றலை வைத்து, கீழே சென்ற எடையை மீண்டும் மேலே கொண்டு வருவதன் மூலம் மின்சாரத்தை 'சேமித்து' வைக்கவும் முடியும்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!