சாக்லேட் சுவையின் ரகசியம்
பெரும்பாலானோருக்கு சாக்லேட் என்றால் பித்துத்தான். சரி, சாக்லேட்டை வாயில் போட்டதும் முதலில், 'இது, இது, இதைத்தான் எதிர்பார்த்தேன்' என்று நாக்கு கண்டறியும் சுவை என்ன? எப்படி அது நாவிற்கு உணர்த்துகிறது? பிரிட்டனிலுள்ள லீட்ஸ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் அதை ஆராய்ந்து கண்டறிந்துள்ளனர்.
சில சாக்லேட்டுகளை 'செயற்கை நாக்கு' கருவியின் மீது வைத்து தேய்த்தபோது, முதலில் சாக்லேட்டிலுள்ள ஒரு வகை கொழுப்பு தான் அந்த பட்டுப் போன்ற உணர்வையும், சாக்லேட் சுகத்தையும் ஏற்படுத்துகிறது. பின்தான் கோகோ துகள்கள் மணம் சேர்க்கின்றன.
அந்த முதல் கடியில் கிடைக்கும் கொழுப்புச்சுவைக்குப் பின் மீதி சாக்லேட்டிலும், கொழுப்பு இருந்தாலும், சுவை அதிகரிப்பதில்லை.
எனவே, சாக்லேட்டில் வெளிப்பக்கத்தில் மட்டும் கொழுப்பு இருக்கும்படி தயாரித்தால், நிறைய சாக்லேட் கொழுப்பு மிச்சமாகும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!