ஜப்பானின் 'ரோபோ' நிறுவனமான 'அக்ரிஸ்ட்'டின் விஞ்ஞானிகள், குடை மிளகாயை அறுவடை செய்யும் ரோபோவை உருவாக்கிஉள்ளனர்.
கூரை போடப்பட்ட பண்ணைகளில் விளையும் குடை மிளகாய் செடிகள், வரிசையாக வைக்கப்பட்ட தொட்டிலில் வளர்கின்றன. அக்ரிஸ்ட் உருவாக்கியுள்ள 'எல்' என்ற ரோபோ, மேலே இரும்பு வடத்தில் தொங்கியபடி, செடி வரிசைகளின் இடைவெளியில் பயணித்து, குடை மிளகாய் செடிகளை பார்வையிடுகிறது.
அறுவடைக்கு தயாரான மிளகாய்களை அடையாளம் காண, சில கேமராக்கள் மற்றும் உணரிகளும் 'எல்' ரோபோவில் இருக்கின்றன.
மேலும், இலைகளில் மறைந்திருக்கும் குடை மிளகாயையும் இந்த ரோபோ கண்டு, லாவகமாக பறிக்க, ரோபோ கரம் ஒன்று இருக்கிறது. இது, மிளகாயின் காம்புப் பகுதியை துல்லியமாகப் பிடித்து, செடிக்கு பாதிப்பு ஏற்படாமல் துண்டித்து, ஒரு கூடையில் பத்திரமாக கொட்டிவிடுகிறது.
இந்த ரோபோவால், குடை மிளகாய் விவசாயிக்கு 20 சதவீதம் அதிக மகசூல் கிடைக்கும். எனவே தான், எல் ரோபோவை 9.20 லட்சம் ரூபாய்க்கு கொடுத்துவிட்டு, அறுவடையில் பங்கு பெறும் திட்டத்தை அக்ரிஸ்ட் ரோபோ நிறுவனம் முன்வைத்துள்ளது.
இந்த ரோபோவினால் அதிக மகசூல் கிடைக்காது. பறிப்பதற்கு கொடுக்கும் கூலி குறையலாம். இதன் விலை 9.20 லட்சம் ரூபாயாம். இதன் மாதந்திர பராமரிப்பு செலவு எவ்வளவு? எத்தகனை வருடம் உழைக்கும்? போட்ட 9.20 லட்சம் ரூபாயை எடுக்க எத்தனை வருடம் ஆகும்? ஒரு ஆளுக்கு மாதம் 15,000 ரூபாய் சம்பளம் கொடுக்கும் பட்சத்தில், 5 ஆட்களுக்கு ஒரு வருடம் கொடுக்கும் சம்பளம் ரூபாய் 9 லட்சம். குடமிளகாய் பயிர் செய்யும் பணக்கார விவசாயிகள் இது தேவையா என்று கணக்கு போட்டுக் கொள்ளலாம்.