காற்றாலைகளோடு விரவிக் கிடக்கும் ரேடியோ மின்காந்த அலை ஆற்றலை, மின்சாரமாக மாற்றும் ஆராய்ச்சி சூடுபிடித்திருக்கிறது. அமெரிக்காவிலுள்ள மத்திய புளோரிடா பல்கலைக் கழக விஞ்ஞானிகள், இத்தகைய ஆற்றலை பயன்படுத்தும் ஒரு உத்தியை கண்டுபிடித்து, காப்புரிமம் பெற விண்ணப்பித்து உள்ளனர்.
பரவலாக இயங்கும் கம்பியில்லா கருவிகள், கணிசமான ரேடியோ மின்காந்த அலைகளை வீணாக வெளியேற்றுகின்றன.
அப்படி வீணாகும் அலைகளைத்தான் புளோரிடா விஞ்ஞானிகளின் உத்தி பயன்படுத்துகிறது. 'பீசோஎலெக்ட்ரிக்' வகை பொருட்கள் சில, ரேடியோ அலைகள் படும்போது மின்சாரத்தை உற்பத்தி செய்கின்றன.
இதை, 'இன்டர்நெட் ஆப் திங்ஸ்' எனப்படும் இணையம் சார்ந்த சிறிய மற்றும் நுண் கருவிகளுக்கு மின்சாரம் கொடுக்க பயன்படுத்த முடியும்.
ரேடியோ அலைகளைத் தேட உணரிகளோ, மின்சாரத்தை உற்பத்தி செய்யவும் சேமிக்கவும் மின்கலனோ தேவையில்லை.
எனவே, இந்தத் தொழில்நுட்பம் வருங்காலத்தில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!