ஏன் சிமென்ட் என்றாலே பசுமைப் பிரியர்கள் வெறுக்கின்றனர்? இன்று உலகில் பெருமளவில் கட்டடங்கள் உருவாகி வருகின்றன. அப்படி உருவாகும் கட்டடங்களில், 90 சதவீதம் காங்கிரீட்டால் கட்டப்படுகின்றன.
காங்கிரீட்டின் முக்கியமான மூலப்பொருள் சிமென்ட். இதை உருவாக்கும் மூலப் பொருட்களை, 1,500 டிகிரி செல்ஷியஸ் வெப்பப்படுத்த வேண்டியுள்ளது. இதனால் ஏகப்பட்ட மாசு காற்றில் கலக்கிறது.
சிமென்டிற்கு பயன்படும் சுண்ணாம்புக் கல்லுக்குப் பதிலாக, கால்சியம் சிலிக்கேட் பாறைகளை சுரங்கங்களிலிருந்து எடுத்து பயன்படுத்தலாம் என்கிறது, 'பிரைம்ஸ்டோன்' என்ற அமெரிக்க புத்திளம் நிறுவனம்.
சுண்ணாம்புக் கல்லை சூடுபடுத்தி சிமென்டாக உருமாற்ற வேண்டியுள்ளது.
ஆனால், கால்சியம் சிலிக்கேட் பாறைகளை நேரடியாகவே சிமென்ட் கலவையில் கலக்கலாம். இதனால், கார்பன் மாசு காற்றில் கலக்க விடுவதில்லை.
ஆனால், கால்சியம் சிலிக்கேட் கொண்ட சிமென்ட், வழக்கமான போர்ட்லேண்ட் சிமென்ட் போலவே உறுதியானதாக இருப்பதாக பிரைம்ஸ்டோனின் தொழில்நுட்பக் குழு தெரிவித்துள்ளது.
இது சந்தைக்கு வந்தால், சற்று கம்மி விலையிலும் இருக்கும் என எதிர்பார்க்கலாம்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!