மருந்து மாத்திரை தின்னாத குடும்பங்களே இல்லை என்பதால், குப்பை மேடுகளில் பிளாஸ்டிக் மற்றும் கண்ணாடி மருந்து புட்டிகள் கணிசமாக சேருகின்றன.
பில்லியன் கணக்கான இந்த மருந்து புட்டிகள், மறு பயன் செய்யும் வகையிலோ அல்லது மட்கும் வகையிலான புட்டிகளாகவோ இருந்தால் எப்படியிருக்கும்? அதைத்தான் செய்கிறது, அமெரிக்காவிலுள்ள, 'கேபினெட் ஹெல்த்' என்ற புத்திளம் நிறுவனம்.
இது செய்த ஆராய்ச்சியின் மூலம், மறு பயன் செய்யத்தக்க கண்ணாடி மருந்து பாட்டில்களை தயாரித்து விற்கத் துவங்கியுள்ளது.
அதேபோல, மண்ணிலோ, குப்பை மேட்டிலோ எளிதில் மட்கி விடக்கூடிய பொருட்களை கொண்டு பிளாஸ்டிக் பைகளையும் கேபினெட் ஹெல்த் தயாரித்து விற்கிறது. மற்ற மருந்து நிறுவனங்களுக்கு தன் புட்டிகள், பைகளை தருவதோடு, கேபினெட் ஹெல்த்தும் சில அன்றாட மருந்துகளை மட்கும் பைகளில் விற்கிறது. சேவையுடன் கூடிய லாபம்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!