தண்ணீரை போதிய அளவு பருகாதவர்களுக்கு, நாள்பட்ட நோய்கள் அதிகமாக வர வாய்ப்புகள் உண்டு என்கிறது, அமெரிக்காவின் தேசிய உடல்நல நிலையம். இதற்கு முன் நடந்த சில எலி சோதனைகளில், பல வாரங்களுக்கு, போதிய நீர் தராமல் வளர்க்கப்பட்ட எலிகளில் பல, அவற்றின் ஆயுளில் ஆறு மாதங்களுக்கு முன்னதாகவே நோய் வந்து இறந்தன.
எலிகளுக்கு ஆறு மாதம் என்பது, மனிதர்களுக்கு 15 ஆண்டுகளுக்கு சமம். இந்த ஆய்வின் தொடர்ச்சியாக, கடந்த 25 ஆண்டுகளாக, 15 ஆயிரம் பேரிடம் எடுக்கப்பட்ட ரத்த பரிசோதனை முடிவுகளை ஆராய்ச்சியாளர்கள் எடுத்துக் கொண்டனர். அந்த ரத்த மாதிரிகளில் சீரம் சோடியத்தின் அளவை வைத்து, ஒருவர் போதிய நீர் குடித்தாரா, இல்லையா என்பது தெரியும். அதை வைத்து ஆராய்ந்தபோது, ஒரு உண்மை தெரிய வந்தது.
சீரம் சோடியத்தின் அளவு கூடுதலாக இருந்தவர்களுக்கு நாள்பட்ட நோய்கள் இருப்பதற்கு வாய்ப்பு அதிகமாக இருந்தது. மேலும், அவர்களுக்கு வயதான தோற்றம் சீக்கிரமே வந்திருந்தது, அதற்குத்தான் அம்மா அடிக்கடி சொல்வார், அப்பப்போ தண்ணீர் குடிச்சுக்கிட்டே இருக்கணும்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!