கலப்பின வீரியச் செடி, கொடிகளை உருவாக்கும் தாவரவியலாளர்கள், சில மாதங்கள் காத்திருந்தால் போதும். தாங்கள் உருவாக்கிய புதிய கலப்பினத் தாவரத்தின் பலனை பார்த்துவிடலாம். ஆனால், இதே உத்தியை மர வகைகளுக்கு செய்ய முடியுமா? முடியாது. இயற்கையில் மரங்கள் பூக்கும் பருவத்தை எட்ட ஏழு முதல் 10 ஆண்டுகள் பிடிக்கும்.
எனவே கலப்பின முயற்சிகளுக்குப் பலனைக் காண, ஆராய்ச்சியாளர்கள் ஏழெட்டு ஆண்டுகளாவது ஆகும்.
ஆனால், அமெரிக்காவின் ஜார்ஜியா பல்கலைக்கழக விஞ்ஞானிகள், மரபணு திருத்தக் கருவியான 'கிரிஸ்பர்' தொழில்நுட்பத்தை நாடியுள்ளனர்.
இதன் மூலம், பூக்க எட்டு ஆண்டுகள் பிடிக்கும் ஒரு மர வகையின் மரபணுக்களில் திருத்தம் செய்து, வளர்த்தபோது, அந்த மரம் ஏழெட்டு மாதங்களிலேயே பூத்துக் குலுங்கியது.
எனவே 'கிறிஸ்பர்' மரபணு திருத்தம் மூலம் மனிதர்களுக்கு பயனுள்ள வகையில் மரக்காடுகளை உருவாக்க, புதிய வீரிய ஒட்டு மரங்களை விஞ்ஞானிகளால் விரைவில் உருவாக்க முடியும்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!