ஆஸ்திரேலியாவிலுள்ள நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழக பொறியாளர்கள் 'சன்ஸ்விப்ட் 7' என்ற காரை உருவாக்கியுள்ளனர். சூரிய ஒளி மின்சாரத்தால் ஓடும் இந்த கார், அண்மையில் கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளது. ஒரு முறை மின்னேற்றம் செய்து, 1,000 கி.மீ.,யை 12 மணி நேரத்திற்குள் பயணித்துக் காட்டியுள்ளது சன்ஸ்விப்ட் 7.
நியூ சவுத்வேல்சின் பொறியாளர்களின் இரு ஆண்டுகள் முயற்சியால் உருவான சன்ஸ்விப்ட் காரின் எடை வெறும் 500 கிலோ தான். ஓட்டுனருக்கான பல வசதிகளை தவிர்த்ததால்தான், இலகுவான மின் வாகனத்தை உருவாக்க முடிந்தது. விரைவில் சூரிய ஒளி மின்சார வாகனங்களுக்கான பந்தயத்தில் சன்ஸ்விப்ட் 7 பங்கேற்க போகிறது.
'கின்னஸ்' சாதனை படைத்த கார்!
வருங்காலத்தை
ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் எவை?
தினமலர் வழிகாட்டி 2023 - அனுமதி இலவசம்
ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் எவை?
தினமலர் வழிகாட்டி 2023 - அனுமதி இலவசம்
Send Hi to 91505 74441
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!