முப்பரிமாண அச்சியந்திரத்தில் மைக்ரோ அளவில் அச்சிடும் ஆராய்ச்சி வேகமெடுத்துள்ளது. அமெரிக்காவின் ஸ்டான்போர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ள புதிய பாலிமர் பிசின், நேனோ அளவுக்கு சிறிய பொருட்களை அச்சிட உதவுகிறது.
உதாரணமாக, மின்னணு பொருட்களின் மேல் பாதுகாப்புப் பூச்சுப்பூச, இந்த பாலிமர் பிசின் அச்சு உதவும்.
'இரட்டை-போட்டான் லித்தோகிராபி' என்ற முறை மூலம் புதிய பாலிமர் பிசினை வைத்து, அதன் மீது லேசர் கதிரைப் பாய்ச்சும்போது, அந்தக் கதிர் படும் இடத்தில், பிசின் வேதிவினை புரிந்து கெட்டியாக மாறுகிறது.
லேசர் கதிரை எந்த வடிவத்தில் பாய்ச்சுகிறோமோ, அந்த வடிவில் ஒரு திடமான பொருள் உருவாகிறது.
இந்த முப்பரிமாண லேசர் அச்சில், பொருட்களை வேகமாக அச்சிட முடிவதோடு, மைக்ரோ அளவில் இருந்தாலும் மிக உறுதியானதாகவும் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். வருங்கால மின்னணுவியலில் இந்த அச்சு முறை மிகவும் பயன்படும்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!