உலகெங்கும் வெளியேற்றப்படும் பசுமைக்குடில் வாயுவான மீத்தேனில், 6 சதவீதத்தை வெளியேற்றுபவை, 100 கோடிக்கும் மேற்பட்ட மாடுகள் தான். இப்படி கசியவிடப்படும் மீத்தேனால், தரை மட்டத்திலேயே ஓசோன் படலம் உருவாகிறது. தரை ஓசோனால் ஆண்டுக்கு 10 லட்சம் பேர் மாசுபாடு சார்ந்த மரணத்தை தழுவுகின்றனர்.
இதைத் தடுக்க, மாடுகளின் இரைப்பையில் மீத்தேனை உருவாக்கும் கிருமிகளை கொல்லும் தடுப்பூசியை உருவாக்க கால்நடை ஆராய்ச்சியாளர்கள் முயன்று வருகின்றனர்.
அத்தகைய தடுப்பூசியை அமெரிக்காவிலுள்ள 'ஆர்கியாபயோ' என்ற நிறுவனம் சோதித்து வருகிறது.
மாடுகளின் இயல்பான செரிமானத்தை பாதிக்காமல், மீத்தேனை உருவாக்கும் கிருமிகளை மட்டும் கொல்வதன் மூலம், கால்நடைகள் சாணக்குடல் வழியே வெளியேற்றும் மீத்தேனை 30 முதல் 100 சதவீதம் வரை தடுக்கலாம் என, தடுப்பூசி ஆராய்ச்சியாளர்கள் மதிப்பிடுகின்றனர்.
அமெரிக்க கால்நடை மருத்துவ முகமைகள், ஆர்கியாபயோவுக்கு அனுமதி கொடுத்தால், 2026க்குள் உலகெங்கும் கால்நடை மீத்தேன் தடுப்பூசி போடுவது நடைமுறைக்கு வரும்.
ஒரு குட்டித் தடுப்பூசிகளால் 30 சதவீத பசுமைக்குடில் வாயு வெளியேற்றத்தை குறைக்க முடிவது 'மெடிக்கல் மிராக்கிள்' தானே?
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!