இதுவரை உருவாக்கப்பட்டதிலேயே, அலோகங்களிலேயே மிகக் கடினமானது என்ற பெயரெடுத்து இருக்கிறது குரோமியம். கோபால்டு மற்றும் நிக்கல் ஆகிய உலோகங்களை கலந்து உருவாக்கியது தான் அந்த அலோகம் என்கின்றனர், அமெரிக்காவின் பெர்க்லி பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள்.
பெரும்பாலான அலோகங்களை உருவாக்குகையில், ஒரு உலோகம் அதிகமாகவும், பிற உலோகங்கள் குறைவாகவும் கலந்து தான் உருவாக்கப்படும். ஆனால், இந்தப் புதிய அலோகத்தில், மூன்றும் சம அளவு கலந்துள்ளன.
இந்த புதிய அலோகத்தை உருவாக்கியதுமே பலவித சோதனைகளுக்கு உள்ளாக்கினர் ஆராய்ச்சியாளர்கள். அதிலிருந்து, இந்த அலோகம் மிகக் கடினமானது, உறுதியானது என்று தெரிய வந்தது. அதுமட்டுமல்ல, இதை கம்பியாக மாற்றவும் உகந்ததாக இருக்கிறது. இதை மிகவும் குளிர்விக்கும்போது, உறுதியான கம்பியை உருவாக்க முடிந்தது.
மிகக் குறைவான எடையில், அதிக எடையை, அழுத்தத்தைத் தாங்கும் இந்த அலோகத்தை விமானம் தயாரிக்கவும், விண்கலன்தயாரிக்கவும் பயன்படுத்த முடியும் என பெர்க்லி விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இதன் பெயரென்ன