மறுக்கப்பட்ட நீதியும் முடிவுறாத தேடலும்' என்ற தலைப்பில், சென்னையில் ஒரு கருத்தரங்கு நடக்கிறது.
டில்லியில் உள்ள தேசிய சட்ட பல்கலை கழகத்தின் வருடாந்திர விரிவுரை என்ற பிரிவில், நிகழ்ச்சியை வகைப்படுத்தி உள்ளனர். 'சம நீதி சம வாய்ப்பு' என்பது அந்த உரை பிரிவுக்கு பல்கலை கழகம் வைத்திருக்கும் முத்திரை. நிகழ்ச்சி நடத்த தேர்வு செய்திருக்கும் இடம், ஒரு ஆங்கில நாளிதழ் ஆதரவில் உருவாகி சென்னையில் செயல்படும் இதழியல் கல்லுாரி.
ஊடக துறையில் சாதிக்க பயிற்சி பெறும் இளம் இந்தியர்கள் மத்தியில் பேருரை ஆற்றப் போகும் பெரியவர் வேறு யாரும் இல்லை.
நச்சு விதை
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவை கொலை செய்த குற்றத்துக்காக தண்டிக்கப்பட்டு, சமீபத்தில் உச்ச நீதிமன்றத்தால் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட பேரறிவாளன் தான், விரிவுரை நிகழ்த்த இருக்கும் பேராசிரியர். 'மகாத்மா காந்தியை கொலை செய்த நாதுராம் கோட்சேயை நல்ல வராக சித்தரிக்க ஆங்காங்கே சிலர் சில முயற்சிகளில் ஈடுபட்டனர்.'தமிழகத்திலும் ஓரிரு சிறு குழுக்கள் அவ்வாறான முயற்சியில் இறங்க ஆயத்தம் ஆவதாக உளவு தகவல் கிடைத்தது. உடனே சுதாரித்த தமிழக அரசு இரும்புக் கரம் கொண்டு அந்த முயற்சியை முளையிலேயே கிள்ளி எறிந்தது. 'சட்டம் மற்றும் நீதி யின் மாண்புக்கு களங்கம் ஏற்படுத்துகிற வகையிலான எந்தச் செயலையும் இந்த அரசு அனுமதிக்காது.இளம் உள்ளங்களில் நச்சு விதைகளை துாவுகிற கொடுஞ்செயலில் எவர் இறங்கினாலும் என் அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது' என்று, முதல்வர் முழங்கினார்.
நெருடல் இல்லையா?
முக்கால் நுாற்றாண்டாக இந்த நாட்டை ஆட்சி செய்த கட்சியினர், தேசத்தந்தையின் மரியாதையும், தேசத்தின் மாண்பும், நீதியின் மாட்சியும் காப்பாற்றப்பட்டதாக மகிழ்ந்து, தமிழக அரசை பாராட்டினர்.எனில், இம்மாதம் 17-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள பேரறிவாளன் பேருரையின் தலைப்பு தமிழக அரசுக்கோ, அதை ஆதரிக்கும் தேசிய கட்சிக்கோ நெருடலாக தெரியவில்லை என்பது புரிகிறது.
புதிய பாடம்
தலைவர்களின் தியாகங்களுக்கும் அவர்களது நினைவுகளுக்கும் கூட காலாவதி தேதி உண்டு என்பது, இந்திய அரசியலில் புதிய பாடமாக சேர்க்கப்பட்டு இருக்கலாம்.விடுதலையாகி வெளியே வந்த கைதி தன் சிறை அனுபவங்களையும் சிந்தனைகளையும், புத்தகங்களாக எழுதி விற்றும், சுற்றுரைகளாக பேசி வெளியிட்டும் காசு சேர்ப்பது ஒன்றும் புதுமை அல்ல; சட்ட விரோதமும் அல்ல.
ஆனால்...புனிதமான இந்தியஅரசியல் சாசனத்தின்பாதுகாவலரான உச்ச நீதிமன்றத்தின் நேரடிப் பார்வையில் உலகறிய சட்டப்படியும் நியாயப்படியும் சாட்சியங்கள் ஆதாரங்களின்அடிப்படையில் நடத்திய பகிரங்க விசாரணையின் முடிவாக தீர்ப்பு வழங்கப்பட்டது.
'வழங்கப்பட்ட நீதியை' ஒரு தண்டனைக் குற்றவாளியின் வாயால், 'மறுக்கப்பட்ட நீதி'யாக சித்தரிக்கவும், அந்தச் சித்திரத்தை நாளைய ஊடகர்களின் மூளைக்குள் பதிக்கவும்நடக்கும் முயற்சியை, தமிழக அரசும், அரசியல் தலைவர்களும், சட்ட மேதைகளும், நீதிமன்றங்களும் கண்டுகொள்ளப்போவதில்லை என்றால்... இந்த நாட்டை இறைவா நீதான் காப்பாற்ற வேண்டும்!
- சூரியதேவா
சிரிப்பு தான் வருகிறது, கருத்து கூற முடியவில்லை, வேலிக்கு ஓணான் சாட்சி. நடத்துங்க.... நடத்துங்க....