பேஸ்புக்கின் அதிபர் மார்க் ஸுக்கர்பர்க் தொடங்கி வைத்த 'மெட்டாவெர்ஸ்' என்ற மெய்நிகர் உலகில், அசல் நகர்களைப் போலவே, டிஜிட்டல் இணை நகரங்கள் உருவாகி வருகின்றன. சியோல் நகருக்கு இணையான 'டிஜிட்டல் ட்வின்' நகரத்தை அந்நகர நிர்வாகம் உருவாக்கி வருகிறது. இதுபோன்ற மெய்நிகர் நகர்களில் கலாச்சாரத்தை வளர்க்கும் அம்சங்களும் இருக்கவேண்டும் என்கின்றனர், 'மெட்டாசியம்' நிறுவனத்தினர்.
மெட்டாவெர்சில், டிஜிட்டல் அருங்காட்சியகங்களை உருவாக்குவதே மெட்டாசியத்தின் நோக்கம்.
சமகால சிற்பங்கள், ஓவியங்கள் முதல் பண்டைக்கால கலைப் பொருட்கள் வரை அனைத்தையும் டிஜிட்டல் முறையில் உருவாக்கி, மெட்டாவெர்சில் 'இடம் வாங்கி', காட்சியகங்களை நிறுவுவதே மெட்டாசியத்தின் வேலை. விரைவில் வீட்டிலிருந்தபடியே, வி.ஆர், தலையணி கருவி மூலம் பல அருங்காட்சியகங்களை பார்வையிட முடியும்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!