தகவல் பரிமாற்றத்திற்காகவே உருவாக்கப்பட்டவை செயற்கைக்கோள்கள். தொலைபேசி, தொலைக்காட்சி, இணையம் என்று பல தகவல் பரிமாற்ற சேவைகளுக்கு, செயற்கைக்கோள்கள்தான் அச்சாணி. அப்படிப்பட்ட செயற்கைக்கோள்கள் அதிவேக தகவல் பரிமாற்றத்துக்கு பெயர்போனவை அல்ல.
அதை மாற்றத்தான் அமெரிக்காவின் எம்.ஐ.டி., கல்வி நிலைய ஆராய்ச்சியாளர்கள் டி--பேர்ட் (TBIRD)என்ற குட்டி செயற்கைக்கோளை உருவாக்கியுள்ளனர்., ஒரு ரொட்டித் துண்டு அளவே உள்ள டி-பேர்ட், அண்மையில் ஒரு பெரிய சாதனை படைத்தது. விண்ணில் மிதந்தபடி, இந்த குட்டிக்கோள் பூமியை நோக்கி லேசர் கதிர்களை அனுப்பியது. அண்மையில் நடந்த இந்த நிகழ்வில், லேசர் கதிர்கள் வழியே நொடிக்கு 100 ஜிகாபிட் தகவல்களை டி-பேர்டால் அனுப்ப முடிந்தது.
விண்வெளியிலிருந்து பூமிக்கு இத்தனை தகவல்கள் ஒரு நொடியில் அனுப்ப முடிந்தது இதுவே முதல் முறை. வழக்கமான செயற்கைக்கோள்கள் ரேடியோ அலை வரிசை மூலமே தகவல்களை அனுப்பும். ஆனால், லேசர் மூலம் தகவல்களை அனுப்பும்போது, ரேடியோ அலைவரிசையைவிட ஆயிரம் மடங்கு செறிவான தகவல்களை வேகமாக அனுப்ப முடியும் என எம்.ஐ.டி., ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!