Load Image
Advertisement

பாரதி தாசனுக்காக பாரதி எடுத்துக் கொண்ட புகைப்படம்

பார்த்தசாரதி கோயில் யானை தள்ளிவிட்டதில் ஏற்பட்ட காயம் காரணமாக பாரதி சிறிது நாள் ஒய்வில் இருந்தார் மருந்துகள் சாப்பிட்டு குணமான நிலையில் மீண்டும் பழையபடி பத்திரிகை அலுவலகத்திற்கு வேலைக்கு சென்றார்
இதைக் கேள்விப்பட்ட பாரதிதாசன் புதச்சேரியில் இருந்து நலம் விசாரித்து பாரதிக்கு கடிதம் எழுதினார்

தான் நலமாகவே இருப்பதாக பாரதி,பாரதிதாசனுக்கு பதில் கடிதம் அனுப்பினார்
ஆனால் அதை ஏற்க மறுத்த பாரதிதாசன் தனக்கு இன்றைய நலமான பாரதியை பார்க்க ஆசை புகைப்படம் எடுத்து அனுப்ப முடியுமா என்று கேட்டிருந்தார்.
அதற்காக பாரதி எடுத்து அனுப்பிய புகைப்படமே பின்னாளில் அவரது வரலாற்றுக்கு பக்க பலம் சேர்க்கும் ஆவணப்படமாக மாறியது.இப்படி ஒரு புகைப்படத்திற்கு பின் உள்ள சுவையான தகவலை பாரதி மற்றும் பாரதிதாசனின் அன்பர்களுக்கு சொல்லியாக வேண்டும் என்பதற்காக பாரதி யார்? என்ற நாடகத்தில் புதிய சேர்க்கையாக இந்த நிகழ்வை சொல்லியிருக்கிறார் பாரதி யார் நாடகத்தில் பாரதியாராக நடித்துள்ள இசைக்கவி ரமணன்.
இதுவரை உலகம் முழுவதும் நாற்பதிற்கும் அதிகமான முறை பாரதி யார் நாடகம் வலம் வந்தாலும் புதிய காட்சிகளுடன் புதிய தகவல்களுடன் பாரதி யார் நாடகம் முதல் முறையாக நடைபெறப் போகிறத
மகாகவியின் நுாற்றாண்டு நிணைவாக அவரது நினைவு நாளை மகாகவி நாளாக கடைப்பிடிப்பது உள்ளீட்ட பதினான்கு முக்கிய அறிவிப்புகளை முதல்வர் வெளியிட்டார்
அவரது அறிவிப்பிற்கு வலு சேர்க்கும் வகையில் இப்போது அரசு சார்பில் பாரதி யார் நாடகம் சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நுாலக அரங்கத்தில் நாளை(07/12//2022) மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது.அனுமதி இலவசம்.
எஸ்.பி.கிரியேசன்ஸ் தயாரிப்பில்,எஸ்.பி.எஸ்.ராமன் இயக்கத்தில்,பரத்வாஜ் ராமன் இசை அமைப்பில்,குரு ரோஜா கண்ணன் நடன அமைப்பில் இசைக்கவி ரமணன் வசனம் எழுதி பாரதியாராக நடித்துள்ளார்.
பாரதியின் வாழ்க்கையை இவ்வளவு சுருக்கமாக இவ்வளவு சுவராசியமாக சொல்லமுடியுமா என்று பார்த்தவர்கள் வியந்து போனதன் காரணமாக உலகம் முழுவதும் இந்த நாடகம் உலா வருகிறது
தற்போது இந்த நாடகத்திற்கு புது மெருகேற்றி உள்ளதால் இந்த நாடகத்தை பார்த்தவர்களும் திரும்ப வரலாம் பார்க்காதவர்கள் அவசியம் வந்து பார்க்கலாம்
உங்களது திரளான வருகை மகாகவிக்கு மென்மேலும் புகழ் சேர்க்கட்டும்.
இது குறித்து இசைக்கவி ரமணன் கவிதை வடிவில் விடுத்த அழைப்பையும் உங்களுக்கு வழங்குகிறோம்.
அரசு தந்த அரங்கிலேஅமர கவியின் வாழ்வினைமுரச றைந்து சொல்கிறோம்முத்தமிழும் ஓங்கவே!
தேசம் தனது தெய்வமாய்சேரி தனது கோயிலாய்நேசமுடன் வாழ்ந்ததோர்நெருப்பின் கதையைச் சொல்கிறோம்!
செந்தமிழின் விதியினைச்சிந்துபாடி மாற்றினான்அந்தணரில் மறவனாம்அவன்கதையைச் சொல்கிறோம்!
பெண்களுக்குக் கண்களாய்பேரழகிப் பிள்ளையாய்மண்ணில் விண்ணைக் கறந்தவன்மாண்பை மன்றில் சொல்கிறோம்!
செல்லம்மாவின் காதலன்செந்தமிழின் நாயகன்சொல்முழுதும் சத்தியம்சொன்னகதை சொல்கிறோம்!
அரசெடுக்கும் திருவிழாஅமரகவியின் பெருவிழாஅரங்கு முழுதும் நிறையவேஅனைவருமே வருகவே!
-எல்.முருகராஜ்.



வாசகர் கருத்து (3)

  • C.Jeyabalan - Shoreline,யூ.எஸ்.ஏ

    தம்பி பிரபாகரன் [சில மாதங்கள் வயதில் சிறியவர்] உயிருடன் இருப்பின், என்னைவிட யாரும் அவ்வளவு சந்தோஷப்படுவார்கள் யாருமில்லை ஆனால் இந்த செய்தி உண்மையா? நம்பமுடியவில்லை

  • N Annamalai - PUDUKKOTTAI,இந்தியா

    விழா சிறக்க வாழ்த்துகிறேன் .முடிந்தால் இணையத்தில் நாடகத்தை போடவும் .நாங்களும் பார்க்கிறோம் தமிழன்னை மகன் கதையை

  • M Ramachandran - Chennai,இந்தியா

    பாரதிதாசன் பாரதி மேல் பக்தியும் மரியாதையை வைத்திரும்தார். அனால் மஞ்சத்துண்டு ஜாதிதுவேசத்தை காண்பித்து தன் சின்ன புத்தியை காட்டி அகிலம் பார்ட்டியா பாரதியய் ஒதிக்கிடிச்சி. உ . பி யில் முதல்வர் காசியில் பாரதியார் வாழ்ந்த வீட்டைய தேச உடமையாக்க நடவடிக்கையெடுக்கிறார். அவர் பிறந்த தமிழ்நாட்டில் ?

  • RAMAKRISHNAN NATESAN - TEXAS ,DALLAS ,யூ.எஸ்.ஏ

    பொய்யின்னு நிரூபிக்க எவனும் கிடையாது ..... அப்படியே இனிமே இதை பொய்யின்னு சொல்லிட்டு எவனாவது கிளம்பினா ஸ்டோரிய முடிச்சுருவோம்ல ????

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement