பிரதமர் மோடி: இந்தியாவின், 'ஜி -20' தலைமைத்துவம், 'இந்த பிரபஞ்சம் முழுதும் ஒன்றே' எனும் உணர்வை மேம்படுத்த பாடுபடும். எனவே, நம் கருப்பொருள், 'ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்' என்பதாகும். இது வெறும் முழக்கம் மட்டுமல்ல... நாம் கூட்டாக மேற்கொள்ளத் தவறிய மனிதச் சூழல்களில், சமீபத்தில் ஏற்பட்ட மாற்றங்களைக் கருத்தில் கொண்டுள்ளது.
டவுட் தனபாலு: இணையம் வழியாக இன்று உலகமே சுருங்கியுள்ளது... நாடுகளுக்கு இடையேயான கலாசார, உணவு பரிமாற்றங்கள் பெருகியுள்ளன... 'ஜி 20' நாடுகளுக்கு தலைமையேற்றுள்ள நம் தேசத்தால், இவ்வுலகம் மேலும் பலன் பெறும் என்பதில், 'டவுட்'டே இல்லை!
தி.மு.க., தலைவர் ஸ்டாலின்: கட்சி பதவிகளுக்கு உழைப்புக்கேற்ற வாய்ப்பு, உருவாகும் வாய்ப்புக்கேற்ற பொறுப்பு என, ஒவ்வொரு நிர்வாகியின் தகுதியை கவனத்திலும், கருத்திலும் கொண்டே நியமனங்கள் நடந்துள்ளன. இதில் ஒருசிலருக்கு வாய்ப்பு போதவில்லை என நினைக்கலாம். கட்சியை நம்பினோர் ஒருபோதும் கைவிடப்படார். உண்மையாக உழைப்பவர்களை, என் கவனத்தில் குறித்து வைத்து இருக்கிறேன். அடுத்தடுத்த வாய்ப்புகளில், உங்கள் எதிர்பார்ப்புகள் நிச்சயம் நிறைவேறும்.
டவுட் தனபாலு: முன்னாள் முதல்வர் கருணாநிதி பாணியில், 'இதயத்தில் இடம் தருகிறேன்' என்பதை இன்னும் நாசுக்காக, தேர்தல் வாக்குறுதி போல சொல்கிறார் என்பதில், 'டவுட்'டே இல்லை!
தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை: மாணவர் முதல் முதியவர் வரை அனைவருக்கும், சுலபமாக போதைப் பொருட்கள் கிடைக்கும் அளவிற்கே உள்ளது, தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கு. அடுத்த முறை, போதைப் பொருட்களின் ஒழிப்பை பற்றி, முதல்வர் ஸ்டாலின் பேசும்போது, ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரையில், 360 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருளை, இலங்கைக்கு கடத்த முயற்சி செய்தபோது, சிக்கிய தன் கட்சிக்காரரை குறிப்பிடுவார் என நம்புவோம்.
டவுட் தனபாலு: கோவையில் நடந்த கார் குண்டு வெடிப்பு, நாட்டின் பாதுகாப்புக்கே 'வேட்டு' வைக்கும் விதமாக இருந்தது... அதுக்கே முதல்வர் ஸ்டாலின் எதுவும் சொல்லாமல், 'கம்'முன்னு இருக்கார்... தன் கட்சிக்காரர் சம்பந்தப்பட்டிருக்கிற போதைப் பொருள் கடத்தல் குறித்து, எதுவும் சொல்ல மாட்டார் என்பதில் எந்த, 'டவுட்'டும் இல்லை!
Kurram seythavan anaivar melum katchi nadavadikkai yeduththaal DMK vil thondane irukka maattaan. Thirudarkal munnerra kazhagam .