ஈரோடு மாவட்ட வேளாண் குறைதீர் கூட்டம் டி.ஆர்.ஓ., சந்தோஷினி சந்திரா முன்னிலையில் நடந்தது. விவசாயிகள் பேசுகையில், 'காளிங்கராயன் வாய்க்காலில் 300க்கும் மேற்பட்ட இடங்களில் சாய கழிவு கலக்கிறது. பலமுறை புகார் செய்தும், மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை; வேளாண் அதிகாரிகளும் கண்டுகொள்ளவில்லை. அதிகாரிகளை 'சஸ்பெண்ட்' செய்து, அலுவலகத்தை பூட்டுங்கள்' என, ஆவேசம் காட்டினர்.
இதற்கு, கலெக்டரின் நேர்முக உதவியாளர் முருகேசன், 'நீங்கள் எங்களுக்கு உத்தரவெல்லாம் போடக்கூடாது. நடவடிக்கை எடுக்கலைன்னா, திரும்ப திரும்ப சொல்லுங்க... என்ன செய்யணும்னு எங்களுக்கு தெரியும்' என்றார்.
மூத்த நிருபர் ஒருவர், 'திரும்ப திரும்ப சொல்லி ஒண்ணும் நடக்காம தானே, இங்க வந்து முறையிடுறாங்க... வேலையே செய்யாத அதிகாரிகளுக்கு, இவரே வக்காலத்து வாங்குனா, நிர்வாகம் உருப்பட்ட மாதிரி தான்' என, தலையில் அடித்தபடி புறப்பட்டார்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!