பெண்களின் அழகை மெருகேற்ற ஆயிரம் அழகியல் கலைகள் இருக்கும் போது 'ஹைட்ரா பேஷியல்' கலை அறிமுகமாகி கலக்குகிறது என்கிறார் மதுரை 'மூன்லைட் சுபிக்சா' மேக்கோவர் ஆர்டிஸ்ட் பாண்டீஸ்வரி
''இன்றைய இளம் பெண்கள், குடும்பத்தலைவிகள் தன்னை தானே அழகாக செதுக்கி கொள்ள அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். அதற்காக அழகியலில் துறையில் அறிமுகமாகும் புத்தம் புதிய கலைகளை தேடி மெருகேற முயற்சிக்கிறார்கள். அந்த வரிசையில் தற்போது 'ஹைட்ரா பேஷியல்' பிரபலமாகிறது. இதை பிரத்யேகமாக நான் செய்கிறேன்.
பெண்களின் முகத்தில் 'ஜெல்' பூசி சிறு இயந்திரத்தில் இணைக்கப்பட்டுள்ள முகமுடி வைத்து, சில நிமிடம் அழகியல் தெரபி கொடுக்க வேண்டும். அதற்கு பின் முகம் மின்னல் போல் மின்னிடும், ைஷனிங்காக மாறும். 30 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த வகை பேஷியலை செய்யலாம். அழகியலோடு பணிப்பளுவால் கால், கை, முதுகு, கழுத்து, தலை வலியால் தவிக்கும் பெண்களுக்கு 'ஸ்மார்ட் ஸ்பா' செய்கிறேன். இதன் மூலம் கை, கால், கழுத்து பிடிப்பு நீங்கி எளிதாக அசைக்கலாம்.கூந்தலில் பொடுகு நீங்கி நன்றாக வளரவும் ஸ்பா இருக்கிறது. எனக்கு அக்குபஞ்சர் தெரியும் என்பதால் இதுவும் சாத்தியமானது.
பெண்களின் எடை குறைக்க எளிய பயிற்சிகள், பிரைடல், எச்.டி., வாட்டர் புரூப், கிரைலான் மேக்கப் நமக்கு கைவந்த கலை தான். மேக்கப் என தெரியாத அளவிற்கு 'நேச்சுரல் லுக்' மேக்கப் செய்வது என் தனிச்சிறப்பு. பெண்களுக்கு அழகியல், ஆரோக்கியம் குறித்து இலவச ஆலோசனைகளும் தருகிறேன் என்றார்.
நீங்களும் அழகாக89401 87291க்கு பேசலாம்.
நன்றி ....