சிறிய அணு மின் நிலையங்களுக்கு எதிர்காலம் இருப்பதாக வல்லுநர்கள் கருதுகின்றனர். ஆனால், அணு மின் நிலையங்கள் வெளியேற்றும் அணுக் கழிவுகளை பாதுகாப்பாக வைத்திருப்பது இன்றும் பெரிய சவாலாகவே இருக்கிறது.
இந்த சவாலைத் தீர்க்க அமெரிக்காவிலுள்ள, 'கியூரியோ' என்ற புத்திளம் நிறுவனம், 'நூசைக்கிள்' என்ற புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளது.
நூசைக்கிள் தொழில்நுட்பம், அணுக் கழிவுகளில் பெரும்பகுதியை, பயனுள்ள பொருட்களாக மறுசுழற்சி செய்கிறது.
அணு எரிபொருளில் வெறும் நான்கு சதவீதமே, அணு உலைகளில் பயன்படுத்தப்படுகிறது. மீதம் 96 சதவீத ஆற்றல், கழிவுகளாக வெளியேற்றப்படுகிறது. இதைத்தான் நூசைக்கிள் தொழில்நுட்பம் மறுசுழற்சி செய்கிறது.
அப்படிச் செய்த பொருட்களை, இன்றைய மேம்பட்ட அணு உலைகளுக்கு எரிபொருளாக தயாரிக்கலாம் என்கின்றனர் நூசைக்கிளின் ஆராய்ச்சியாளர்கள்.
அணுக்கழிவில் உள்ள ஐசோடோப்புகளை, விண்வெளி ராக்கெட்டுகளுக்கான ஆற்றல் பேட்டரிகளுக்கும், மின் வாகனங்களுக்கான பேட்டரிகளுக்கும் பயன்படுத்தலாம் எனவும் நூசைக்கிள் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
நூசைக்கிள் தொழில்நுட்பத்தின் மூலம், கதிரியக்க ஆபத்துள்ள கழிவுகளின் அளவை வெகுவாக குறைத்துவிட முடியும் எனவும் நூசைக்கிள் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துஉள்ளனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!