மின்சார இருசக்கர வாகனங்கள் சாலைக்கு வரத் தொடங்கியுள்ளன. அவற்றை சார்ஜ் செய்ய போதிய மின்னேற்ற நிலையங்கள் இல்லாதது பெரிய குறையாக உள்ளது. இதற்கு தீர்வாக, சாலையில், வாகன நிறுத்துமிடங்களில், தரையில் பொறுத்தும் வயர்லெஸ் சார்ஜர் கருவிகளை உருவாக்கியுள்ளது லாத்வியா நாட்டைச் சேர்ந்த 'மியர்டாட்'.
மியர்டாட் கருவிகளை தார் சாலையின் மேல் பகுதியிலோ அல்லது சாலைகளின் அடியே தோண்டி புதைத்தும் வைக்கவோ முடியும். இதன் மேல் செல்லும் இருசக்கர வாகனங்களில் மியர் டாட்டின் ரிசீவர் கருவியை பொருத்திவிடவேண்டும்.
இதனால், சாலையில் பதிக்கப்பட்டுள்ள மியர்டாட் கருவியிலிருந்து கம்பியில்லா மின்சாரம் பாய்ந்து, ரிசீவர் மூலம் வாகனத்திலுள்ள மின்கலனில் மின்சாரம் சேமிக்கப் படும்.
தற்போது, மின்சார கம்பிகள் மூலம் கார்களுக்கு மின்னேற்றம் செய்ய ஆகும் அதே நேரம்தான், கம்பியில்லா மியர்டாட் முறையிலும் ஆகும் என அந்நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சாலையில் தான் ஆக்ரமிப்பு செய்வாங்க