மனித மூளையின் செயல் வேகத்தைவிட, இன்றைய சிலிக்கன் சில்லுகள் அதிக வேகமாக இயங்கும் திறன் படைத்தவை. கணக்கு முதல் சதுரங்க ஆட்டம் வரை மனிதர்களை கணினி சில்லுகள் வீழ்த்தினாலும், மனிதன் சாதாரணமாகச் செய்யும் பல வேலைகளை கணினிகளாலும் ரோபோக்களாலும் செய்ய முடிவதில்லை.
மனிதனால், நிஜ உலகை புரிந்துகொள்ள முடியும். ஆனால் ரோபோக்களுக்கு அந்த திறன் இல்லை.
அந்த திறனை ரோபோக்களுக்குத் தரும் சில்லினை இன்டெல் நிறுவனம் உருவாக்கியுள்ளது. மனித நரம்பு மண்டலமும் மூளையும் இயங்கும் விதத்தின் அடிப்படையில் இயங்கும் இந்த சில்லுக்கு, 'லோய்ஹி 2' என்று பெயர்.
இது அதி வேகமாக தரவுகளை அலசும். சுற்றுப்புறத்திலுள்ள. அசையாப் பொருட்கள், நகரும் மனிதர்கள், வெளிச்சம், இருட்டு, மேடு, பள்ளம் போன்ற தகவல்களை உணர்ந்து, ரோபோக்களுக்கு உடனடி புரிதலைத் தர லோய்ஹி 2 சில்லு உதவும்.
உதவியாய் இருந்தால் நல்லதுதான்