Load Image
dinamalar telegram
Advertisement

தகவல் ஆர்வலர்களை 'டார்ச்சர்' செய்யும் அதிகாரிகள்!

''மார்க்கெட் இல்லாத நடிகையை கட்சியில சேர்க்க பேச்சு நடத்தியிருக்காங்க...'' என்றபடியே, நண்பர்கள் நடுவில் அமர்ந்தார் அந்தோணிசாமி.

''எந்தக் கட்சியில, யாரை சேர்க்கப் போறாவளாம்...'' எனக் கேட்டார், அண்ணாச்சி.

''அந்த தமிழ் நடிகை, 20 வருஷத்துக்கும் மேலா நடிச்சிட்டு இருக்காங்க... வயசு கிட்டத்தட்ட 40 ஆகப் போகுது... சில வருஷமா மார்க்கெட், 'டவுண்' ஆயிடுச்சுங்க...

''சமீபத்துல வந்த மன்னர் படத்துல, முக்கிய பாத்திரத்துல நடிச்சிருக்காங்க... அதை பார்த்துட்டு, நிறைய பட வாய்ப்பு வரும்னு எதிர்பார்த்தாங்க... ஆனா, 'ஹீரோயினா தான் நடிப்பேன்'னு அடம் பிடிக்கிறதால, பெரிய அளவுல வாய்ப்புகள் வரலைங்க...

''இதுக்கு நடுவுல, காங்கிரஸ்ல இருந்த நடிகையர் நக்மா, குஷ்பு எல்லாம் வெளியில போயிட்டாங்களே... அதனால, இப்ப மாநில வாரியா முக்கிய நடிகையருக்கு வலை வீசுறாங்க...

''அந்த வகையில, இந்த நடிகைக்கும் துாது விட்டிருக்காங்க... ஆனா, தனக்கு ராஜ்ய சபா எம்.பி., பதவி தந்தா, லோக்சபா தேர்தல்ல தமிழகம், ஆந்திரா, கேரளா, கர்நாடகாவுல பிரசார பீரங்கியா வலம் வர்றேன்னு நிபந்தனை விதிச்சிருக்காங்களாம்...'' என்றார், அந்தோணிசாமி.

''அ.தி.மு.க.,வோட கூட்டணி போட்டுக்கிட்டாவ வே...'' என, அடுத்த மேட்டருக்கு மாறிய அண்ணாச்சியே தொடர்ந்தார்...

''கோவை மாவட்டம், வால்பாறையில தேயிலை தோட்ட தொழிலாளர்கள் கூலி உயர்வு கேட்டுட்டு இருக்காவ... இவங்களுக்காக, தொகுதி அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., அமுல் கந்தசாமி, பல போராட்டங்களை நடத்திட்டு இருக்காரு வே...

''இவருக்கு ஆதரவா, மா.கம்யூ., - ம.தி.மு.க., - காங்கிரஸ் கட்சியின் ஐ.என்.டி.யு.சி., தொழிற்சங்க தலைவர்களும் சேர்ந்து போராட்டத்துல குதிச்சிருக்காவ... 'நம்ம கூட்டணியில இருந்துக்கிட்டு, அ.தி.மு.க.,வோட சேர்ந்து போராடுதாவளே'ன்னு உள்ளூர் தி.மு.க.,வினர் எரிச்சல்ல இருக்காவ வே...'' என்றார், அண்ணாச்சி.

''தகவல் அறியும் உரிமை சட்டத்துல கேள்வி கேட்டா, பொய் வழக்கு போடுறாங்க பா...'' என்றார் அன்வர்பாய்.

''அடப்பாவமே... எந்த ஊர்ல ஓய்...'' எனக் கேட்டார், குப்பண்ணா.

''காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில்ல ஏகப்பட்ட முறைகேடுகள் நடக்குது... இதை, சகோதரர்களான டில்லிபாபு, தினேஷ் ஆகிய இருவர், தகவல் அறியும் உரிமை சட்டம் மூலமா வெளியே கொண்டு வந்தாங்க பா...

''இதனால, கோபமான கோவில் அதிகாரி ஒருத்தரும், உள்ளூர் போலீஸ் அதிகாரியும் கூட்டணி சேர்ந்து, சகோதரர்களுக்கு, 'டார்ச்சர்' குடுக்கிறாங்க... ரெண்டு பேர் மேல பொய் வழக்குப் பதிவு பண்ணிட்டாங்க பா...

''அடிக்கடி திருட்டு, வழிப்பறியில ஈடுபடுற குற்றவாளிகளை, 110 குற்ற நடைமுறை சட்டத்தின்படி, ஆர்.டி.ஓ., முன்னாடி ஆஜர்படுத்தி, 'இனிமே இந்த மாதிரி சம்பவங்கள்ல ஈடுபட மாட்டோம்'னு பத்திரத்துல எழுதி வாங்குவாங்களே... அதே மாதிரி இவங்களையும் ஆஜர்படுத்தி, பத்திரம் எழுதி வாங்க இருக்காங்க... இதனால, சகோதரர்கள் நொந்து போயிருக்காங்க பா...'' என முடித்தார், அன்வர்பாய்.

நாயர் தந்த டீயை பருகிவிட்டு அனைவரும் கிளம்பினர். எதிரே வந்த இருவரை நிறுத்தி, ''வேதமூர்த்தி, கிருஷ்ணமூர்த்தி வாங்கோ... ஸ்டேட்ஸ்ல இருந்து எப்ப வந்தேள்...'' என குப்பண்ணா பேச துவங்க, மற்றவர்கள் நகர்ந்தனர்.வாசகர் கருத்து (2)

  • Dharmavaan - Chennai,இந்தியா

    RT I சகோதரர்கள் கோர்ட்டுக்கு போய் இதை நீக்க வேண்டும்.அதற்கு பிஜேபி ஹிந்து முன்னணி போன்றவை உதவ வேண்டும்.

  • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

    இந்த தகவல் அறியும் சட்டத்தால் ஊழல்கள், முறைகேடுகள் வெளிவந்துவிடும் என்ற கடுப்பில் தான் இதெல்லாம் நடக்கிறது

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement