Load Image
dinamalar telegram
Advertisement

'டவுட்' தனபாலு

உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி: தமிழகத்தில், புதிய தேசிய கல்வி கொள்கை வந்தால், 3, 5, 8ம் வகுப்புகளுக்கு கூட பொதுத் தேர்வு வந்து விடும். அந்த நிலை ஏற்படாமல் இருக்க, மாநில அளவில் கல்வி கொள்கை உருவாக்கப்படுகிறது. தமிழகத்தில், இருமொழி கொள்கை மட்டுமே பின்பற்றப்படும்.

டவுட் தனபாலு: தேசிய கல்வி கொள்கையில், பொதுத் தேர்வு பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை... அதற்கு முன் நீங்களே, 'புலி வருது' கதையாக, படிக்கிற பசங்க மத்தியில பீதியை கிளப்பணுமா என்ற, 'டவுட்' எழுதே!



தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை:
'யு டியூப்' சேனல்களுக்கு, தமிழக பா.ஜ., சார்பில் நேர்காணல் வழங்கி வரும் சிலர், கட்சியின் நிலைப்பாடுகளை விடுத்து, தங்களது சொந்தக் கருத்துகளை முன்னிறுத்தி வருகின்றனர். அந்த வீடியோவை பார்க்கும் மக்களுக்கு, பா.ஜ.,வின் அதிகாரப்பூர்வ கருத்து மற்றும் கட்சியின் எண்ண ஓட்டம் இதுதான் என்ற தவறான பிம்பத்தை ஏற்படுத்தி விடுகிறது. எனவே, இனி வரும் காலங்களில், கட்சியின் ஒப்புதல் பெற்ற பின்பே, நிர்வாகிகள் நேர்காணல் வழங்க வேண்டும். கட்டுப்பாடுகளை மீறுபவர்கள் மீது, தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.

டவுட் தனபாலு: 'தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன்' என்பது மாதிரி, வாய் இருக்கிறவங்க எல்லாம் பேட்டி தரலாம்கிற சூழலை, தற்போதுள்ள சமூக வலைதளங்கள் உருவாக்கிடுச்சு... அதனால, இந்த மாதிரி கடும் கட்டுப்பாடுகள் விதிச்சா மட்டுமே, பா.ஜ., மட்டுமல்ல... எந்த ஒரு கட்சியின் கண்ணியத்தையும் காப்பாற்ற முடியும் என்பதில், 'டவுட்'டே இல்லை!



பா.ஜ., மாநில துணைத் தலைவர் ராமலிங்கம்:
நீண்ட நாட்களுக்கு, தி.மு.க., அரசு பயணிக்காது. தமிழகத்தில் லோக்சபா தேர்தலுடன் சட்டசபை தேர்தலும் நடக்கக் கூடும் என்ற நிலை உள்ளது. லோக்சபா தேர்தலை மட்டுமல்ல, சட்ட சபை தேர்தலையும் சந்திக்க தயாராகி கொண்டிருக்கிறோம்.

டவுட் தனபாலு: நீங்க, எல்லா தேர்தலுக்கும் தயாராக இருக்கலாம்... ஆனா, உங்களை துாக்கி சுமக்க வேண்டிய அ.தி.மு.க., என்ற தேரின் அச்சாணி முறிந்து போய் மூலையில கிடக்கிறதே... தேர்தலுக்கு முன்பே, அந்த வண்டி சரியாகவில்லை என்றால், உங்க கனவு பலிக்குமா என்பது, 'டவுட்'தான்!





வாசகர் கருத்து (1)

  • Devan - Chennai,இந்தியா

    தமிழக அமைச்சர்கள் மற்றும் அரசு மாணவர்களை தேர்வுக்கு பயப்பிடும்படியாக இருக்கை க்க விரும்புகிறார்கள்&இவர்கள் படித்து நாளை வேலைக்கு செல்லும் போது தேர்வ நேர்காணல் ஆகியவற்றை எப்படி எதிர்கொள்வார்கள்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement