விழுப்புரத்தில் சேதமடைந்த வீட்டு வசதி வாரிய பழைய குடியிருப்பு கட்டடத்தை, வீட்டுவசதி துறை அமைச்சர் முத்துசாமி நேரில் ஆய்வு செய்தார்.
அப்போது கூறுகையில், '1999ல் கட்டப்பட்ட இந்த குடியிருப்பு கட்டடங்கள், உடனடியாக இடித்து அகற்றப்படும். இந்த கட்டடங்கள் சேதமடைந்துள்ளதற்கு, அவற்றை முறையாக பராமரிக்காததும், தரமற்ற கட்டுமான பணியும் தான் முக்கிய காரணம். இனிமேல் குறைந்தபட்சம், 80 ஆண்டுகள் தாக்குப் பிடிக்கும் வகையில், தரமான கட்டடங்கள் கட்டப்படும்' என்றார்.
மூத்த நிருபர் ஒருவர், 'நீங்க சொல்கிற வருஷத்தில், தமிழகத்தில் தி.மு.க., தானே ஆட்சியில் இருந்தது... அந்த ஆட்சியில் தரமில்லாமல் வேலை செய்ததை ஒப்புக் கொள்கிறீர்களா...?' என, முணுமுணுக்க, மற்றொரு நிருபர், 'அப்ப தி.மு.க., ஆட்சியில் இருந்தாலும், முத்து சாமி அ.தி.மு.க.,வில் தானே இருந்தார்... அதான் யோசிக்காமல் பேசிட்டார்...' என, 'கமென்ட்' அடித்து சிரித்தார்.
இந்த வரும் காலங்களில் ஐந்து ஆண்டுகள் மட்டுமே நிலைத்து இருக்கும்படி வீடுகள் கட்டப்படும் அப்போதுதான் ஒவ்வொரு ஆட்சிக்கும் வீடு காட்டும் வாய்ப்பு கிட்டும்