ஓட்டல்களில் மட்டும் தான் ருசியாக, விதவிதமான உணவுகளை சமைக்க 'செப்' இருப்பார்களா. வீடுகளிலும் என்போன்ற 'ஹோம் செப்' இருக்கிறார்களே... யூ டியூப் வழி உணவு சமைக்க கற்றும் தருகிறார்கள் என்கிறார் மதுரை உணவுகலைஞர் ஷர்மிளா...
'சும்மா பில்டப் கொடுத்தா எப்படி' என நாம் கேட்க... கேமரா, லைட்டிங் என ஸ்டூடியோ போல் காட்சியளித்த கலக்கல் கிச்சனில் புதினா, கறிவேப்பிலை என 'கிரீன் சிக்கன்' சமைக்க களமிறங்கி விட்டார்...
*புதினா சிக்கன்
தேவையான பொருட்கள்: சிக்கன் - அரை கிலோ, புதினா - ஒரு கைப்பிடி, இஞ்சி - சிறிதளவு, பூண்டு - 10 பல், தயிர் - 3 ஸ்பூன், மஞ்சள், மிளகாய் பொடி - அரை ஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவைக்கு ஏற்ப, தாளிப்பதற்கு கொஞ்சம் கறிவேப்பிலை, சோம்பு.
செய்முறை: மிக்ஸியில் புதினா, மல்லி, இஞ்சி, பூண்டு, மிளகாய், தயிர், உப்பு ஆகியவற்றை நன்றாக அரைத்து, சிக்கனில் பூசி வைக்கவும். கடாய் சூடானதும் எண்ணெய் அல்லது வெண்ணெய் ஊற்றி அதில் சிக்கனை வதக்கவும். 20 நிமிடம் சிம்மில் வேக விட்டு எடுத்தால் புதினா சிக்கன் ரெடி.
*கறிவேப்பிலை சிக்கன்........
தேவையான பொருட்கள்: சிக்கன் - அரை கிலோ, சின்ன வெங்காயம் - 10, தக்காளி - 1, தயிர் - 2 ஸ்பூன், கறிவேப்பிலை பொடி - 3 ஸ்பூன், மிளகு, சீரகம், சோம்பு - அரை ஸ்பூன், இஞ்சி, பூண்டு விழுது - 1 ஸ்பூன், கறிவேப்பிலை - 1 கைப்பிடி, வத்தல்- 5, நல்லெண்ணெய், உப்பு - தேவைக்கு ஏற்ப
செய்முறை: சிக்கனை சுத்தம் செய்த பின் மஞ்சள் பொடி, தயிர், இஞ்சி, பூண்டு பேஸ்ட்டில் புரட்டி வைக்கவும். சோம்பு, சீரகம், மிளகு, வத்தல், கறிவேப்பிலை ஆகியவற்றை வறுத்து பொடியாக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி சோம்பு, சீரகம், கறிவேப்பிலை, தக்காளி, வெங்காயம் போட்டு நன்றாக வதக்கவும். எண்ணெய் பிரியும் வரை சிக்கனை வதக்கி பின் உப்பு, கறிவேப்பிலை பொடி சேர்த்து 15 நிமிடம் மூடி வைக்கவும். காரசாரமான கறிவேப்பிலை சிக்கன் ரெடி.
- YouTube: NSKP's Home Kitchen
- ஸ்ரீனி
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!