Load Image
Advertisement

லஞ்சம் வாங்க, 'பேக்கேஜ்' சிஸ்டம்... மக்களுக்கு ரொம்ப கஷ்டம்!

வடகிழக்கு பருவமழையின் தாக்கம் தணிந்த ஒரு மாலை நேரம். சித்ராவின் வீட்டுக்கு சென்ற மித்ராவை, ''வா... மித்து. நல்லவேளை மழை நின்னதுக்கு அப்றம் வந்துட்டே. இரு, சூடா இஞ்சி டீ குடிச்சிட்டு, பார்க் வரை போயிட்டு வரலாம்'' என்றவாறே ஆவி பறக்க டீ கொடுத்தாள்.

இருவரும் டீயை பருகி முடித்த பின், ''அக்கா, நகர சபா கூட்டதிலே...'' என மித்ரா ஆரம்பித்தவுடன், ''அத ஏன்டி கேக்குற. நெறைய உள்ளாட்சிகளில், அதுக்கான ஏற்பாடுகள் சரியில்லையாம். இருந்தாலும் அவசர, அவசரமா ஒரே ஒரு வார்டுல மட்டும் கூட்டம் நடத்தி 'கணக்கு' காண்பிச்சிட்டாங்க. அதிலும், நெறைய அரசியல் என்ற சித்ரா தொடர்ந்தாள்.

நகர சபாவில், 'நறநற'''நல்லுாரில் நடந்த கூட்டதுல, சேதி சொல்ற துறை மினிஸ்டரு, சவுத் வி.ஐ.பி., மேயருன்னு எல்லா வி.ஐ.பி.,யும் கலந்துட்டாங்க. மினிஸ்டர் பக்கத்துல உட்கார்ந்த 'சவுத்', போட்டோ எடுத்து முடிஞ்சதும், 'கலெக்டர் ஆபீசில ஒரு மீட்டிங் இருக்கு'ன்னு கிளம்பிட்டாரு. ரெண்டு பேரும் எலியும், பூனையுமா இருக்கறதால தான, 'கணக்கு' காண்பிச்சுட்டு போயிட்டாரு, கட்சிக்காரங்களே பேசிக்கிறாங்க...'' என்றாள் சித்ரா.

''அக்கா.... இங்க கூட பரவாயில்ல. ஆளுங்கட்சி பொதுக்கூட்டமான்னு, சந்தேகப்படற அளவுக்கு, பல்லடத்துல கூட்டம் நடந்திருக்கு. மத்த வார்டுகளை சேர்ந்த ஆளுங்கட்சி நிர்வாகிங்க கலந்துக்கிட்டாங்க. 'சம்மந்தமே இல்லாம, இவங்க எதுக்கு, வர்றாங்கன்னு, மக்கள் பேசற அளவுக்கு நிலைமை போயிடுச்சாம்,'' மித்ரா தன் பங்குக்கு சொன்னாள்.

''ஏங்க்கா... பூண்டி நகராட்சியில், ஆளுங்கட்சி கவுன்சிலரே முறைகேடா வாட்டர் கனெக்ஷன் வாங்கி, சிக்கிட்டாராமே. கனெக்ஷனை அதிகாரிங்க 'கட்' பண்ணிட்டாங்களாமே...'' என்றாள் மித்ரா.

கூட்டணியில் 'லடாய்'''ஆமா மித்து. அவருக்கு, 'சீட்' உறுதியானதும், 'இல்லீகல் கனெக்ஷனை சரி பண்ணிக்கோங்க. ஏதாவது பிரச்னையாகிட போகுது'ன்னு, கட்சி நிர்வாகிகளே சொல்லியும். இப்ப, வசமா சிக்கிட்டாரு; இதவைச்சு, அவரு பதவிக்கு வேட்டு வைக்க, தாமரைக்கட்சிக்காரங்க காய் நகர்த்திட்டு இருக்காங்க'' என கள நிலவரம் பேசினாள் சித்ரா.

''அக்கா, 'அனுமதியில்லாத குழாய் இணைப்பையெல்லாம் துண்டிக்கணும்'ன்னு, நகராட்சி தீர்ப்பாயம் மூலமா தோழர்கள் வாங்கின உத்தரவுதான், இந்த நடவடிக்கைக்கு காரணமாம்,''

''உண்மைதான்டி மித்து. நெறைய இடத்துல கூட்டணி கட்சிக்குள்ள 'லடாய்' தான்,'' என சித்ரா சொல்லியவாறே, பூங்கா நுழைவாயிலில், டிக்கெட் வாங்கி கொண்டாள். உள்ளே சென்ற மழைத்துளிகள் தென்பட்ட இருக்கையில் அமர்ந்தனர்.

ஆம்னி பஸ்சுக்கு ஆதரவு?''தீபாவளிக்கு, நிறைய சிறப்பு பஸ் விட்டிருக்கோம்ன்னு, சம்மந்தப்பட்ட மினிஸ்டர் சொன்னாரு. ஆனா, நிறைய இடங்கள்ல பஸ் இல்லாம, பயணிங்க ரொம்ப சிரமப்பட்டிருக்காங்க. ஆம்னி பஸ்காரங்க தான், வசூல் அள்ளிட்டாங்களாம்,'' என, பேச்சை மாற்றினாள் மித்ரா.

''உண்மை தான். திருப்பூரில இருந்து, சென்னைக்கு மூனு பஸ் ஓடிட்டு இருந்துச்சு; அதுல ஒன்றை தீபாவளிக்கு முன்னாடியே நிறுத்தி, டிப்போவுல ஓரங்கட்டிட்டாங்க. 'மெயின்டனென்ஸ்'க்காக நிறுத்தி வைச்சிருக்கோம்ன்னு, காரணமும் சொன்னாங்க. ஆனா, ஆம்னி பஸ்களுக்கு சாதகமா தான், அந்த பஸ்சை ஓரங்கட்டிட்டாங்கன்னு பேசிக்கிறாங்க,'' என, கேள்விபட்டதை சொன்னாள் சித்ரா.

அரசு இயந்திரத்தில் 'பழுது!'வேர்க்கடலை வாங்கி சாப்பிட்ட சித்ரா, ''துறை அதிகாரிகளோட மெத்தனப்போக்கால தான் நிறைய பிரச்னை வருது,'' என, பேச்சை மாற்றினாள் சித்ரா.

''இது என்ன மேட்டருங்க்கா...''

''போன வாரம் அனுப்பர்பாளையம் கவர்ன்மென்ட் ஸ்கூல்ல, தடகள போட்டி நடத்தினாங்க. காலைல, எட்டரை மணிக்கு போட்டி துவங்கும்ன்னு சொல்லியிருந்தாங்க. உடுமலை, தாராபுரம் கல்வி மாவட்டத்துல இருந்தெல்லாம் கூட, நிறைய பசங்க அதிகாலையிலயே புறப்பட்டு வந்துட்டாங்க. ஆனா, வி.ஐ.பி., வர்றதுக்கு, ஒன்றரை மணி நேரம் லேட் ஆனதால, பசங்க ரொம்ப சோர்ந்து போயிட்டாங்களாம்,''

''இனி மேலாவது இந்த மாதிரி நடக்காம பார்த்துக்கிட்டா பரவாயில்ல'' என்ற மித்ரா, ''வழக்கமா, பள்ளி கல்வித்துறை சார்பில நடக்கிற விளையாட்டு போட்டிகளோட சேர்த்து, இந்த வருஷம் சிலம்பம், ஜூடோ, குத்துச்சண்டை, டேக்வாண்டோ, ஸ்குவாஷ், நீச்சல், சைக்கிள் போட்டின்னு, புதிய விளையாட்டுகள அறிமுகப்படுத்தியிருக்காங்க,''

''மாவட்ட லெவல்ல ஜெயிக்கிறவங்க கன்னியாகுமரி, திருச்சி, அரியலுார், காஞ்சிபுரத்தில் நடக்குற மாநில போட்டியில கலந்துக்கலாம்னு சொல்லி, டைம்டேபிள் குடுத்துட்டாங்க. ஆனா, போட்டி எங்க நடக்குதுன்னு, இதுவரைக்கும் சொல்லலையாம்,'' என்றாள் சித்ரா.

''இப்படி பண்ணாங்கன்னா, எப்படிதான், பசங்க திறமையை காண்பிப்பாங்க'' என அங்கலாய்த்த மித்ரா, ''கலெக்டர் ஆபீசுக்கு பக்கத்துல லேடீஸ் காலேஜில், பி.காம்., படிக்கிறவங்களுக்கு கிளாஸ்ரூம் இல்லாததால, மரத்தடியில உட்கார வைச்சுதான் கிளாஸ் நடக்குதாம். கொசுத்தொல்லை தாங்க முடியாததால, கொசுவர்த்தி பத்த வைச்சுட்டு தான் பாடம் படிக்க வேண்டியிருக்காம்,'' என்றாள்.

'பேக்கேஜ் சிஸ்டம்!'''சவுத் தாலுகாவுல, பட்டாவுல பேர் மாத்தறதுக்கு, அஞ்சாயிரம் 'பிக்ஸ்' பண்ணிட்டாங்களாம். பெரிய இடமா இருந்தா, எட்டாயிரம் வரை வாங்கறாங்க.இதுக்காக, வி.ஏ.ஓ., ஆபீஸ்லேயே, 'பேக்கேஜ்' பேசி முடிச்சிடறாங்களாம்''

''விவசாய நிலம் தொடர்பான விவகாரமா இருந்தா, பெரிய அதிகாரிங்க, 'ஸ்பாட் விசிட்' போய், 'கறாரா' கமிஷன் பேசி முடிச்சதுக்கு அப்புறம் தான் கையெழுத்தே போடறாங்கனு, விவசாயிங்க புலம்பறாங்க,'' என்றாள் மித்ரா.

''விவசாய நிலம்ன்னு சொல்லவும் தான், ஞாபகம் வருது; ரெண்டு நாளைக்கு முன்னாடி தெக்கலுாரை சேர்ந்த மக்கள், தாலுகா ஆபீஸ்க்கு வந்து, தங்களோட நிலப்பிரச்னையை தீர்த்து வைக்கணும்னு, சொல்லி போராட்டம் செஞ்சாங்க...''

''அவங்ககிட்ட போலீஸ் சமாதானம் பேசினப்போ, ''சார்…எங்க ஊர்ல, நிறைய பிரச்னை இருக்கு; நெறைய மண் லோடு லோடா எடுத்து விக்கிறாங்க. அதபத்தி நாங்க பேசினா, நிறைய பேரு மாட்டிக்குவாங்க'ன்னு சொல்லி, போகிற போக்கில் கொளுத்தி போட்டுட்டுட்டாங்க...'' என்றாள் சித்ரா.

3வது கண்ணுக்கு...''லஞ்சம், ஊழலை ஒழிக்கவே முடியாது போல…'' என, சலித்து கொண்ட மித்ரா, ''ஸ்மார்ட் சிட்டி திட்டதுல, சிட்டிக்குள்ள நிறைய வேலைங்க செய்றாங்க. சிட்டிக்குள்ள தப்பு பண்றவங்கள ஈஸியா தெரிஞ்சுக்கிற மாதிரி, ரொம்ப தெளிவா படம் பிடிக்கிற, 'ைஹடெக் சிசிடிவி' கேமராவை பொருத்த போறதா சொன்னாங்க,''

''ஆனா, ஏற்கனவே இருக்கற கேமரா, அவ்வளவு ஒன்னும் துல்லியமா இல்லையாம். அதுல பதிவாகிற படம் தெளிவில்லாம இருக்கறதால, சில வழக்கில் முன்னேற்றம் இல்லாம இருக்காம்,'' என்றாள்.

''மூனாவது கண்ணுக்கே, கண்ணாடி போடணும் போல...'' என சிரித்த மித்ரா, ''சிட்டியில ஒற்றர்படை பெரிய போலீஸ் ஆபீசரை தர்மபுரிக்கு மாத்திட்டாங்க. அந்த இடத்தை பிடிக்க, நிறைய போட்டியாம். இப்போ, ஆவண காப்பகத்துல இருந்து ஒரு ஆபீசரை போட்டிருக்காங்க. கண்டிப்பா இருப்பார்ன்னு, நினைக்கிறேன்,'' என போலீஸ் மேட்டரை சொன்னாள்.

துாது மேல் துாது''அக்கா... நானும் ஒரு போலீஸ் மேட்டர் சொல்றேன். போன மாசம், சிட்டியில நிறைய பேரை டிரான்ஸ்பர் செஞ்சாங்க. அதில, பலரு மறுபடியும் பழைய இடத்துக்கு வர டிரை பண்றாங்களாம். அந்த வகையில 'சவுத், நார்த்' ரெண்டிலும் 'ரவுண்ட்' கட்டி, வேற டிபார்ட்மென்டில் இருக்கும் 'சேட்டை'க்காரர் மீண்டும் ஸ்டேஷன் டியூட்டி போக துடிக்கிறாராம். இவரு மாதிரி ஆளுங்கட்சி வி.ஐ.பி.,களுக்கு துாது மேல துாது விடறாங்களாம்...''

அப்போது, சித்ராவின் மொபைல் போன், 'ஹாய் செல்லம்' என்ற ரிங்டோனில் அழைத்தது. ''ஹலோ, யாருங்க. செல்வம்னு யாருமில்லீங்களே...'' என பேசி, அழைப்பை துண்டித்தாள்.

''போன வாரம், ஆளுங்கட்சிக்காரங்க ஹிந்தி எதிர்ப்பு பொதுக்கூட்டம் நடத்தினாங்க. அதுல, எதிர்பார்த்த கூட்டமே இல்லை. ரொம்ப கம்மியாத்தான் தொண்டர்கள் இருந்தாங்களாம்,'' என அரசியல் மேட்டருக்கு தாவிய மித்ரா, ''கட்சிக்காரங்களே இப்பெல்லம் ஹிந்திய வரவேற்கிற நிலைமை தான் இருக்கு; அவங்கவங்க பசங்கள ஹிந்தி படிக்க வைச்சுட்டு தான் இருக்காங்க,'' என்றாள் மித்ரா.

''சரியா சொன்ன மித்து. நம்ம ஊருல லட்சக்கணக்குல ஹிந்திக்கார தொழிலாளர்ங்க இருக்காங்க. பஸ் கண்டக்டர், மார்க்கெட் வியாபாரிங்க... இப்படி பலரும் புரிஞ்சுட்டு, ஓரளவுக்கு ஹிந்தி பேசறாங்க... நிலைமை இப்படி இருக்கறப்ப, ஹிந்தியை எப்படி எதிர்ப்பாங்க. அது அந்தக்கால அரசியல். இப்பல்லாம், எடுபடாதுன்னு நினைக்கிறேன்'' என யதார்த்தம் பேசினாள் சித்ரா.

அப்போது, மழைத்துளிகள் விழ ஆரம்பித்தது. ''வாங்க்கா... மழை வலுவா வர்றதுக்குள்ள வீட்டுக்கு போயிடலாம்,'' என மித்ரா சொல்ல, இருவரும் புறப்பட்டனர்.வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
வருங்காலத்தை
ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் எவை?
தினமலர் வழிகாட்டி 2023 - அனுமதி இலவசம்

Send Hi to 91505 74441

திருப்போரூர் திருவிழா - இது சொந்தவீடு வாங்கும் பெருவிழா!

Advertisement
Advertisement