Load Image
Advertisement

'பியூட்டி போலீஸ்' உபாசனா

புள்ளினமும் பொறாமை கொள்ளும் மெல்லினமே... கொஞ்சும் தமிழும் பேச கெஞ்சும் சொல்லினமே... இல்லை என தாராளமாக சொல்லும் இடையினமே, பார்த்தாலே ஈர்க்கும் பரவச பெண்ணினமே, உன் விழிகள் இரண்டில் ஓடும் மானினமே... என தன் அழகால் அழகை ஆராதிக்கும், பிரபுதேவா உடன் பியூட்டி போலீசாக நடிக்கும் உபாசனா மனம் திறக்கிறார்.

உங்கள் நடிப்பில் கலக்க போகும் படங்கள்?



எஸ்.பி.ராஜ்குமார் இயக்கத்தில் 'லோக்கல் சரக்கு', மணி தாமோதரன் இயக்கும் 'ஷார்ட்கட்', ஷாம் ரோட்ரிக்ஸ் இயக்கத்தில் 'மூசாசி' என வித்தியாசமான படங்களின் நடிக்கிறேன். மூன்று படங்களின் ரிலீஸ்காக ஐயம் வெயிட்டிங்.

'மூசாசி' என்ன கதைக்களம்?



ஜப்பானிய போராளி, நடிகராக இருந்தவர் தான் 'மூசாசி'. படத்தில் பிரபுதேவா போலீஸ் துணை கமிஷனராக நடிக்கிறார். அவரது போலீஸ் குழுவில் நானும் போலீசாக வருகிறேன். சீரியஸான படம்... பிரபுதேவாவுக்கு டான்ஸ் கூட இல்லை.

நடிப்பு மட்டும் தானா டான்ஸ் கூட ஆடுவீங்களா?



ஆமா... பரதநாட்டியம், சால்சா, இந்தியன், வெர்ஸ்டர்ன் என பலடான்ஸ் எனக்கு தெரியும். கல்லுாரி நாட்களில் நிறைய மேடைகளில் ஆடியிருக்கேன். நான் நடிக்கும் படங்களில் வாய்ப்பு வந்தால் கண்டிப்பாக டான்ஸ் ஆடி கிளப்பிடுவேன்.

டிவி ரியாலிட்டி ஷோக்களில் ஆர்வம் இருக்கிறதா?



நிறைய இருக்கு... டிவியில் கேம் ஷோ, 'வில்லா டூ வில்லேஜ்'ங்குற ரியாலிட்டி ஷோக்கள் பண்ணியிருக்கேன். அடுத்தடுத்து வாய்ப்பு வருது. பாலிவுட், ஓ.டி.டி.,யில் நடிக்க நல்ல கதைகளை தேடிகிட்டு இருக்கேன்.

உபாசனாவின் பிட்நஸ், அழகின் ரகசியங்கள் என்ன?



எப்பவும் வெளியே உணவு சாப்பிட மாட்டேன். வீட்டு உணவு தான் எடுத்துட்டு போவேன். எண்ணெய், காரம் குறைத்து தான் சாப்பிடுவேன். வாக்கிங், ஜாக்கிங் போவேன். நிறைய தண்ணீர் குடிக்கிறேன். நீங்களும் பாலோ பண்ணுங்க அழகா இருப்பீங்க.

குஜராத் வதோதரா வாசி தமிழ் நல்லா பேசுறீங்களே?



ஆரம்பத்தில் கொஞ்சம் கஷ்டமாக தான் இருந்தது. வரிசையாக தமிழ் படங்களில் தமிழ் டயலாக் பேசி நடிப்பதால் நல்லா பேச பழகிட்டேன்.

நடிக்க வந்த பின் மாடலிங், பேஷன் ஷோக்கள்... ?



அதெப்படி விட முடியும்... இப்போ கூட சர்வதேச பிராண்ட், வெட்டிங் போட்டோ ஷூட் எல்லாம் பண்ணிட்டு வந்திருக்கேன். பிரபல மேக்கப் பயிற்சி நிறுவனத்தின் பிராண்ட் அம்பாஸிடரா இருக்கேன். 'ஏலைட் மிஸ் இந்தியா ஏசியா 2015'ல் டைட்டில் வின்னர்.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
+2 மாணவர்களே!
என்ன படித்தால் சிறந்த எதிர்காலம்?
தினமலர் வழிகாட்டி 2023 அனுமதி இலவசம்

Send Hi to 91505 74441

திருப்போரூர் திருவிழா - இது சொந்தவீடு வாங்கும் பெருவிழா!

Advertisement
Advertisement