Load Image
Advertisement

என் உசுருக்குள்ள கூடு கட்டி காதல் வளர்த்தேன்


காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன்என் உசுருக்குள்ள கூடு கட்டி காதல் வளர்த்தேன்
மகேந்திரன் பி.காம்.,எம்.பில்.,பி.எச்.டி.வரை படித்த பட்டதாரி
சென்னையைச் சேர்ந்தவர், திடீரென அவருக்குள் ஏற்பட்ட மனஅழுத்தம் அவரை மனநோயாளியாக்கி சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள அரசு மனநல மருத்துவமனையில் கொண்டு போய்ச் சேர்த்தது.

வேலுரைச் சேர்ந்தவர் தீபா எம்.ஏ.,பி.எட்.,பட்டதாரி
அப்பா மீது அளவுகடந்த பாசம் திடீரென ஒரு நாள் அவர் இறந்து போக சகலமும் தன்னைவிட்டுப் போய் தான் தனிமையானதாக உணர்ந்தார், மன அழுத்தம் வரப்பெற்று தவித்தார் ஓரு கட்டத்தில் அவரும் கீழ்பாக்கம் மனநல மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தார்.இருவரும் முறையான சிகிச்சை எடுத்துக் கொண்டனர் கொஞ்சம் கொஞ்சமாக நார்மல் நிலைக்கு திரும்பவே அவரவர் தகுதிக்கு ஏற்ப தினக்கூலி வேலையும் கொடுக்கப்பட்டது.
முன்பு போல இவர்கள் இல்லை வீட்டிற்கு அழைத்துச் செல்லலாம் என்று மருத்துவமனை சார்பில் சொல்லப்பட்டாலும் இருவரது வீட்டிலும் ஏற்பது போல இல்லை இதன் காரணமாக வீடற்றவர்கள் தங்கி சிகிச்சையை தொடருவதற்கான விடுதியில் தங்கியிருந்தனர்.
இருவரும் கடந்த ஆறு மாதத்திற்கு முன்தான் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொண்டனர்
முதல் பார்வையிலேயே மகேந்திரனுக்கு தீபாவை பிடித்துவிட்டது அதன் பிறகு அவரை நிழல் போல தொடர்ந்தார பார்க்கும் போதெல்லாம் ‛கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே' என்ற பாடலை பாடுவார்
முதலில் இதற்கெல்லாம் அர்த்தம் தெரியாமல் இருந்த தீபா ஒரு நாள் நான் உன்னை காதலிக்கிறேன் கல்யாணம் செய்து கொள்ள விரும்புகிறேன் என்றதும் விக்கித்துப் போய்விட்டார்.
நிறைய யோசித்து பின் புன்னகையை பதிலாகவும் காதல் பரிசாக கொடுத்தார்.
அதன்பிறகு இருவரும் ஒருவரை ஒருவர் பிரியாமல் இருந்தனர் நகமும் சதையுமாக சேர்ந்தே சுற்றினர் இருவரது முகத்திலும் அப்படியொரு சந்தோஷம்,கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே பாடல் அந்த மருததுவமனை வளாகத்தில் எப்போதும் கேட்டுக்கொண்டே இருந்தது.
ஆனால் மருத்துவமனை சட்டதிட்டப்படி இது தவறு என்பதால் மருத்துவமனை இயக்குனர் பூர்ணசந்திரிகா இருவரையும் இதெல்லாம் இங்கே கூடாது என்று எச்சரிப்பதற்காக அழைத்தார்
ஆனால் இருவரின் களங்கமற்ற அன்பும் குழந்தையைப் போன்ற சந்தோஷமும் அவரது மனதை மாற்றியது
மருந்து செய்யாத மாயத்தை காதல் செய்திருந்தது ,இருவருமே தங்கள் காதலில் உறுதியாக மட்டுமின்றி தெளிவாகவும் இருந்தனர்
பொதுவாக மனநிலை சிகிச்சை பெறுபவர்கள் எதற்கும் ஆசைப்படமாட்டார்கள் நமக்கு பணம் என்றால் அவர்களுக்கு அது காகிதம்தான் நமக்கு தங்கம் அவர்களுக்கு தகரம் நமக்கு வீடு அவர்களுக்கு அது அடைத்துவைக்கும் கூடு உணவு கூட நாம்தான் கொடுக்கவேண்டும் அவர்கள் கேட்கமாட்டார்கள் இப்படி அடிப்படை தேவைக்கு ஆசைப்படாதவர்கள் திருமணம் போன்ற பந்தத்தை நினைத்துக்கூட பார்க்கமாட்டார்கள் இதுதான் 228 வருட கீழ்பாக்கம் மனநல மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நோயாளிகளின் தன்மை
இந்த தன்மையின் உண்மையை இந்த காதல் ஜோடி உடைத்துள்ளது, திருமணம் செய்து கொள்வதில் உறுதியாக இருந்தனர் ஒன்று நீங்கள் நடத்துகீறீர்களா இல்லை நாங்களாக நடத்திக் கொள்ளட்டுமா என்ற நிலையில் இருந்தனர்
யோசித்துப்பார்த்தோம் இந்த ஜோடிகள் இணைவதன் மூலம் மனநலம் பாதித்த மற்றவர்களுக்கும் ஒரு நம்பிக்கை பிறக்கும் என்பதால் இருவருக்கும் திருமணம் செய்துவைக்க முடிவு செய்தோம்.
இப்படி எடுத்த முடிவின்படி இருவருக்கும் இன்று (28/10/2022)காலை மருத்துவமனையில் உள்ள கோவில் வளாகத்தில் திருமணம் நடைபெற்றது
எங்களுக்கு முன் இருந்த கேள்வி இவர்களின் நிரந்தர வாழ்வாதாரத்திற்கு என்ன செய்வது என்பதாகத்தான் இருந்தது அதற்கான விடையும் திருமணத்தை நடத்திவைத்த சுகாதர துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மூலமாக கிடைத்தது
மாங்கல்யத்தை எடுத்து தந்த கையுடன் மணமக்கள் நாள்கூலியாக பார்த்த வேலையை நிரந்தரமாக்கி மருத்துவமனையின் ரெகுலர் பணியாட்களாக பணிநியமன ஆணையும் கொடுத்தார்
அனைவருக்கும் மகிழ்ச்சி மணமகன் மகேந்திரனுக்கு கூடுதல் மகிழ்ச்சி மணமகள் தீபாவின் கையை பிடித்தபிடியை விடாமல் கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே என்று பாடிக்கொண்டிருந்தார் சத்தமாகவும்..சந்தோஷமாகவும்.
-எல்.முருகராஜ்வாசகர் கருத்து (2)

  • NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா

    வாழ்க மணமக்கள்

  • N Annamalai - PUDUKKOTTAI,இந்தியா

    சிறப்பாக வாழ வாழ்த்துக்கள் .வேலை உத்திரவாதம் அளித்த மனதிற்கு நன்றிகள் .வீடுகளில் விளக்கு ஏற்ற அரசு நல்லதை செய்கிறது என்று மகிழ்ச்சி கொள்கிறேன்

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement