குளிக்காமலே வாழ்ந்து வந்த உலகின் அழுக்கு மனிதர் என்ற பட்டத்தை சுமந்திருந்த ஒருவர் தனது 94 வயதில் இறந்துவிட்டார்,அதுவும் குளிப்பாட்டியதால்..
ஈரான் நாட்டில் தெற்கு மாகாண பகுதியில் உள்ள பார்சில் அருகே உள்ள தேஜ்கா என்ற கிராமத்தில் வசித்து வந்தவர்தான் அமா ஹாஜி,
இவர் யார்? எப்படி வந்தார்? என்பதைச் சொல்லும் தலைமுறையினர் மறைந்துவிட்டனர், எப்போது குளித்தார் என்று கேட்டால் ஐம்பது அறுபது வருடத்திற்கு முன் என்று ஆளாளுக்கு சொல்வர் ஆக மொத்தத்தில் அவர் எப்போதும் குளித்தது இல்லை என்பது தெரிகிறது.மோசமான உணவுகளையும் கழிவு நீரையும் குடித்து வாழ்ந்தவர் அவர் வரலாறைச் சொல்கின்றனர்
சாக்கு போன்ற உடையும் அழுக்கு படிந்த உடலும் அதனால் ஏற்படும் நெடியும் யாரையும் அவருடன் நெருங்கவிடவில்லை அவரும் அதை விரும்பவில்லை
ஊருக்கு வெளியே வானாந்திரமான இடத்தில் கிடைத்ததை உண்டு வாழ்ந்து வந்த மனிதர் நேற்று இறந்துவிட்டார்
உலகம் முழுவதும் அழுக்கு மனிதர் என்று அறியப்பட்டவர் என்ற தகவல் ஊடகங்களில் உலா வருகிறது.உண்மையில் அவரை விட உள்ளத்தில் நிறயை அழுக்குகள் உள்ள மனிதர்களால்தான் அவர் அழுக்கு மனிதரானார்
நமது கிராமத்து பெரியவர் ஒருவர் இப்படி இருப்பது நமக்கல்லவா அவமானம் என்று கிராமமே கூடியல்லவா அவருக்கு நல்லது செய்திருக்கவேண்டும்.
அவரை பற்றி டாக்குமெண்டரி எடுத்தவர்கள் அவர் படித்தவர் போலத்தான் பேசுகிறார் போரும் அதன் தீய விளைவுகளையும் அலசுகிறார் என்று சொல்கின்றனர்
ஆக வெளியாட்கள் வந்து பேசமுடியும் என்ற நிலையில் உள்ள அந்த விவரமான மனிதரை கோமாளியாக பைத்தியமாக பார்த்தார்களே தவிர உள்ளூர் மக்கள் பேச முயற்சிக்கவில்லை என்றால் பேசாத நீங்கள் அல்லவா அழுக்கு மனிதர்கள்
அவருக்கு கெட்டுப்போன உணவும் புகைபிடிப்பதும் ரொம்ப பிடிக்கும் என்கின்றனர் நீங்கள் வீட்டில் சாப்பிட்டுவிட்டு மீதம் இருந்த கெட்டுப்போன உணவை அவர் பக்கம் வீசிவிட்டு நாளடைவில் அவர் கெட்டுப்போன உணவைத்தான் சாப்பிடுவார் என்று சொல்லும் நீங்கள் அல்லவா அழுக்கு மனிதர்கள்
இவ்வளவு மோசமான உணவை சாப்பிட்டுவிட்டு குளிக்காமல் எப்படி இவ்வளவு நாள் வாழமுடிந்ததது என்று அவரது உடலை வைத்து ஆராயப்போகிறாரகளாம்இங்கே இவரைப் போலவே சாக்கடையை ஒட்டி கொசுக்கடிக்கு நடுவில் வாழும் ஒரு இனம் இருக்கிறது அவர்களில் ஒருவர் கூட இந்த கோவிட்டால் பாதிக்கப்படவில்லை, அது போலத்தான் அந்தப் பெரியவரின் உடலும் மனதும் இரும்பாகிப் போயிருக்கிறது, அவரது உடலை ஆராய்வதற்கு முன் அவரது மனதை ஆராயதவர்களே அழுக்கு மனிதர்கள்.
விட்டிருந்தால் இன்னும் சில ஆண்டுகள் இருந்திருப்பார் ஆனால் இவரை குளிக்கவைத்தால் என்னவாகிவிடும் என்று அவரை குண்டுகட்டாக துாக்கிச் சென்று ஆற்றில் போட்டு அலசி எடுத்து வேடிக்கை பார்த்த அழுக்கு மனிதர்களால் ஏற்பட்ட பாதிப்பே மரணத்தில் கொண்டு வந்து முடித்துள்ளது..
இப்போது சொல்லுங்கள் அவரா அழுக்கு மனிதர்?
-எல்.முருகராஜ்
திராவிஷ மனங்களை விடவா அழுக்கு?