'பேஸ்புக்'கின் தாய் நிறுவனமான 'மெட்டா' அண்மையில், 'மே எ வீடியோ' என்ற ஒரு இணையதளத்தை அறிமுகம் செய்துள்ளது.
இந்த தளத்தின் பின்னணியில் இருக்கும் அதி நவீன செயற்கை நுண்ணறிவு மென்பொருள், ஒரு சில வரிகளில் நமக்கு வேண்டிய வீடியோ காட்சியைப் பற்றி எழுதிக்கொடுத்தால், உடனே அதை புரிந்து கொண்டு, அதே போன்ற காட்சிகளை தயாரித்துத் தருகிறது.
ஏற்கனவே 'டாலி-2' போன்ற மென்பொருட்கள், சில சொற்களைத் தந்தால் அதற்கேற்ற படத்தை உருவாக்கித் தருகின்றன. ஆனால், மெட்டாவின் மேக் எ வீடியோ, அதற்கும் மேலே சென்று பக்காவான வீடியோ காட்சிகளையே தருகிறது.நீங்கள் தரும் சொற்களை வைத்து, இணையத்தில் கிடைக்கும் வீடியோக்களை அலசி, தானாகவே மேக் எ வீடியோவின் மென்பொருள் காட்சிகளை உருவாக்குகிறது.
பார்ப்பவர்கள் அதிசயிக்கும் வகையில் அந்த காட்சிகள் உள்ளன. என்றாலும், சில பிழைகளும் தற்போது அவற்றில் உள்ளன. ஆனால், விரைவில் இத்தகைய பிழைகள் களையப்படும் என மெட்டாவின் உயரதிகாரியான மார்க் சக்கர்பர்க் தெரிவித்துஉள்ளார்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!