இயந்திரங்களின் பலத்திற்கு ஈடில்லை என்ற கருத்தியலில்தான், நவீன கப்பல் போக்குவரத்து உருவானது. ஒரு நுாற்றாண்டு கடந்த பின், மீண்டும் ஆதிகால பாய்மரங்களை, நவீன கப்பலில் பொறுத்தியுள்ளது, சீன நிறுவனம் ஒன்று.
வழக்கமான டீசல் இயந்திரம் பொருத்தியகப்பலில், கூடுதலாக 40 மீட்டர் உயர நான்கு பாய்மரங்களை அந்நிறுவனம் சேர்த்துள்ளது.பாய்மரங்களை, கணினிகள் கட்டுப்படுத்தும். தேவையில்லாதபோது, பொத்தானை அழுத்தினால் இந்த கார்பன் இழை பாய்மரங்கள் சுருங்கிவிடும்.
அண்மையில் மத்தியக் கிழக்கிலிருந்து, துாரக்கிழக்கு கரை வரையிலான பயணத்தில் இந்த பாய்மரங்கள், 10 சதவீத டீசலை மிச்சப்படுத்தின. ஒரு பயணத்திற்கு, 2,900 டன்கள் கார்பன்-டை-ஆக்சைடு காற்றில் கலப்பது தவிர்க்கப்படும்.
இக்காலத்திற்கு தேவையான வடிவம் பெற்றுள்ளது வாழ்த்துக்கள்