தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை: தஞ்சை அருகே கொள்ளிடம் ஆற்றில் குளிக்க சென்ற ஆறு பேர், மணல் கொள்ளையர்கள் பறித்த குழியில் மூழ்கி பலியான செய்தி வேதனை அளிக்கிறது. இது, திறனற்ற தி.மு.க., அரசின் ஒத்துழைப்போடு நடக்கும் மணல் கொள்ளையால் ஏற்பட்ட முதல் உயிர் இழப்பு இல்லை. ஜூன் மாதம், கடலுார் அருகே கெடிலம் ஆற்றில் குளிக்க சென்ற ஏழு பேர், மணல் பள்ளத்தில் சிக்கி உயிரிழந்த சோகம் நிகழ்ந்தது. தொடர்ச்சியாக நடக்கும், இதுபோன்ற உயிரிழப்புகளுக்கு திறனற்ற தி.மு.க., அரசே பொறுப்பு.
டவுட் தனபாலு: வார்த்தைக்கு வார்த்தை திறனற்ற தி.மு.க., அரசுன்னு போட்டு தாக்குறீங்களே... திறனற்ற அரசை வீட்டுக்கு அனுப்ப, திறனுள்ள திட்டம் ஏதாவது வச்சிருக்கீங்களா என்ற, 'டவுட்'டுக்கு விளக்கம் தாங்களேன்
டில்லி 'எய்ம்ஸ்' மருத்துவமனையின் இயக்குனர் டாக்டர் ஸ்ரீனிவாசன்: எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தினமும் ஏராளமான வெளிநோயாளிகள் வருகின்றனர். இவர்களை பற்றிய விபரங்களை பதிவு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள், மொபைல் போன் பயன்படுத்துவதாக குற்றச்சாட்டுகள் வருகின்றன. வரும் 16ம் தேதி முதல், வெளிநோயாளிகள் விபரங்களை பதிவு செய்யும் பிரிவில் உள்ள ஊழியர்கள், பணி நேரத்தில் மொபைல் போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
டவுட் தனபாலு: தமிழக அரசு மருத்துவமனைகள் மற்றும் அலுவலகங்களிலும், பலர் குனிஞ்ச தலை நிமிராமல், மொபைல் போன்லயே மூழ்கிக் கிடக்கிறாங்க... 'எய்ம்ஸ்' போல இங்கும் தடை விதிச்சா, நிர்வாகம் உருப்படும் என்பதில், 'டவுட்'டே இல்லை
பத்திரிகை செய்தி: எத்தியோப்பியா நாட்டில் இருந்து, சென்னைக்கு இயக்கப்படும் 'எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ்' விமானத்தில், மூன்று மாதங்களில் மட்டும், 131.46 கோடி ரூபாய் மதிப்பிலான, 15 கிலோ போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.
டவுட் தனபாலு: இத்தனை கோடி போதைப் பொருட்களை பிடிச்சிட்டதா பெருமை அடிச்சுக்கிறாங்களே... இவ்வளவு போதைப் பொருளையும், சென்னையில வாங்கி, வினியோகிக்க ஒரு, 'நெட் ஒர்க்' இருக்கணுமே... அதை கண்டுபிடிக்கிறதுல நம்ம அதிகாரிகள் ஆர்வம் காட்டாதது ஏன் என்ற, 'டவுட்' எழுதே!lll
வாயை மூடிக் கொண்டு பேசவும். சகிக்க முடியவில்லை.