நீலகிரி மாவட்டம் கூடலுாரில், காங்கிரஸ் எம்.பி., ராகுல் நடைபயணம் மேற்கொண்டார். இதற்கான ஏற்பாடுகளை தமிழக காங்., மாநில தலைவர் அழகிரி பார்வையிட்டார்.
அப்போது கூறுகையில், 'ஹிந்துக்கள் குறித்து, தி.மு.க., - எம்.பி., ராஜா பேசியது அவரது சொந்தக் கருத்து இல்லை. பண்டைய காலத்தில் எழுதப்பட்ட புத்தகத்தில் படித்ததை கூறியுள்ளார்; இது எல்லாம் உண்மை. காங்., கட்சியில், ஹிந்து கடவுள்கள் மீது நம்பிக்கை உள்ளவர்கள் அதிகம் பேர் உள்ளனர். எனவே, ஹிந்து மதத்துக்கு எதிரானது காங்கிரஸ் என்று, பா.ஜ., கூறினால் ஏற்றுக்கொள்ள மாட்டோம்' என்றார்.அப்போது, பார்வையாளர் ஒருவர், 'தேர்தல் நேரத்துல காங்கிரசுக்கு கொடுக்கற ஒண்ணு, ரெண்டு சீட்டுக்கு அறிவாலயத்துல கதற விடும் போதே, இவரு, தி.மு.க.,வுக்கு இப்படி முட்டுக் கொடுக்கிறாரே... இன்னும் உரிய மரியாதை தந்து, காங்கிரசை துாக்கிப் பிடித்தால், தி.மு.க.,வுக்கு இவங்க என்னவெல்லாம் செய்வாங்க...' என, முணுமுணுத்தபடி நடந்தார்.
'இப்படி முட்டுக் கொடுக்கிறாரே!'
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!